பக்கம்:அத்தை மகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


சின்னப் பெண்ணாகயிருந்தபொழுது---அவன் கத்தியது உண்டு. அவளையும், அவனையும் ஒன்றாகப் பார்க்கும் போதெல்லாம் மற்றச் சிறுவர்களும் சிறுமிகளும் கத்தியது உண்டு. 'அஞ்சும் மூணூம் எட்டு ; அத்தை மகளைக் கட்டு’ என்றுதான். இதைக் கேட்டு அவள் சீறுவாள். அம்மாவிடம் சொல்வாள். அத்தையோ சொன்னா என்ன? யாரு சொல்லுதா? உன்னைக் கட்டிக்கிடப் போறவன்தானே சொல்லுதான்' என்பாள். அவள் மற்றவர்களிடம் அடிக்கடி சொல்லி மகிழ்ந்திருக்கிறாள். 'ரத்னமும் சுந்தரமும்தான் பொண்ணு மாப்பிள்ளை. நல்ல பொருத்தம்' என்று.


இப்பொழுது சுந்தரத்துக்கு வேடிக்கையான ஆசை எழுந்தது. கூவ வேண்டும். 'ஏ. ரத்னம்..ஏட்டி ஏ. ரத்னம்! ஏ புள்ளெ ரத்தினோம் என்று சின்ன வயசிலே கத்தி ரகளைப் படுத்தினானே அது மாதிரிக் கூச்சலிட வேண்டும். அத்துடன் 'அஞ்சும் மூணூம் எட்டுதான் அத்தை மகளைக் கட்டுவான் என்று சொல்லி அவளைப் பிடித்து இழுத்து.......

மனசிலே எண்ணி விடலாம். ரொம்ப சுலபம். ஆனால் அப்படியே செய்து காட்ட முடியுமா? அதற்கு அவனிடம் துணிச்சல் தான் உண்டா ?

ஆகவே, அவனால் அப்போது வெற்றிகரமாகச் செய்து முடிக்கக் கூடிய சாப்பிடும் அலுவலை கவனிக்கச் சென்றான் சுந்தரம். -

பட்டுடைச் சரசரப்பு காதில் விழுந்தது. இனிய வாசனை அலைகள் மிதந்து வந்தன. வளைகள் கலகலத்தன. அவன் ஆர்வமாகத் திரும்பித் திரும்பிக் கவனித்தான். பாவம் துரதிர்ஷ்டம் பிடித்தவைதான் அவன் கண்கள்! அவன் அவ்விதமே நினைத்தான். ஏனெனில் அத்தை மகள் ரத்தினத்தின் அழகான கிழலைக்கூடப் பார்க்க முடியவில்லையே! • . . . ------ --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/13&oldid=975921" இலிருந்து மீள்விக்கப்பட்டது