பக்கம்:அத்தை மகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

 காகக் காத்திருந்தான். வசந்தப் பசுமையின் சாயை கூட அவன் வாழ்வு வெளியிலே படிய வழியில்லை.

ஒரு வருஷம்---ஒன்றரை வருஷம்---இரண்டு வருஷங்கள் கூட ஒடிப்போயின.

அவன் அத்தை அவசரப்படுத்தினாள். கடிதத்தின் மேல் கடிதம் எழுதினாள். கெஞ்சியும் மிஞ்சியும், சீறியும் சினந்தும் சிரித்தும் குறை கூறியும் எழுதினாள். எப்படி எழுதினால்தான் என்ன? வாழ்வின் கடும்.வெயில் அவனைக் கருக்கிக் கொண்டிருந்தது. அதனால் அவன் வேறு எதுவும் செய்வது சாத்தியமேயில்லை. அவனுக்கு ஆசையில்லாமலாபோயிற்று ? வழி தென்படவில்லேயே!

ஆசைக் கனவுகளை வளர்த்து வந்தாள் ரத்தினம். இன்பம் பூத்துக் குலுங்கும் எதிர்காலச் சோலையே அவள் நினைவு. அத்தானுடன் வாழப்போகிற இன்ப வாழ்வின் பலரகத்தோற்றங்களே அவள் கண்ட கனவு. அவள் திட்டங்களிட்டாள். கற்பனைச் சோலையில் இன்பச் சிறகு பரப்பி ஆனந்தமாக நீந்தும் சிறு கிளி அவள். நிகழ்காலத்தின் கானல் அவளுக்குத் தெரியாது. இனி வரவிருக்கும் வசந்தத்தின் குளுமைதான் அவளுக்குப் புரிந்திருந்தது. பிடித்திருந்தது.

காலம் அவள் கனவுக்குத் துணைசெய்யாமல் வாய்தாப் போட்டுக் கொண்டிருந்தது. போகட்டும்---இன்னும் போகட்டும் இன்னம் கொஞ்சநாள் போகட்டுமே!’ என்று காலத்தை ஏலத்தில் விட்டு வந்ததை அவள் விரும்பவில்லை. சகித்துக்கொள்ள முடியவில்லை.

பதினெட்டு---பத்தொன்பது----இருபது வயசு ஏறி வந்தது. எனினும் அவள் தனியள். அவளுக்காக அத்தான் இருந்தான். ஆனாலும் அவளது இளமை வதங்கி வாடியது, கவனிப்பற்று. அவளுக்குக் கல்யாணம் உண்டு என்று நிச்சயம் செய்தாயிற்று. ஆயினும் வாழ்வில் மலர்ச்சி பிறக்கவில்லை. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/29&oldid=981997" இலிருந்து மீள்விக்கப்பட்டது