பக்கம்:அன்பு மாலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அன்பு மாலை


நண்ணார் பாலே அஞ்சுகின்றார்;
நாதன் ராம சுரத்குமார்
அண்ணால், என்றே வந்தடைந்தால்
அல்லல் எல்லாம் தீருமரோ.

166


ஞானம் தன்னை நனிஉரைப்பான்;
ஞாலத் தாசை போக்குதற்கே
ஈனம் இல்லா வழிகாட்டி
இசைப்பான் நல்ல மந்திரத்தை;
மோனம் பயிலான் ஆனாலும்
மோன நிலத்தில் இருக்கின்றான்;
ஆன ராம சுரத்குமார்
அவனைப் பணியின் நலமுறுமே.

167


இராமன் பாதம் எந்நாளும்
இறைஞ்சி உள்ளத் தமைத்துள்ளான்;
பராவும் அவன்சீர்த் திருநாமம்
பாடிப் பாடிப் பரவுகின்றான்;
அராவும் அரமாய்க் கன்மவினை
அடர்தல் போக்கி அருள்செய்வான்;
தராத லத்தில் ராமசுரத்
குமாரைச் சார்ந்து நலம்கொள்வீர்.

168

அடர்தல் - சேர்ந்து துன்புறுத்தல்.


பாட்டைக் கேட்பின் மிகஉகப்பான்;
பாலைத் தந்தே உபசரிப்பான்;
ஏட்டில் எழுதாப் பெருஞ்சீரான்;
எல்லாத் துன்பும் கலைகின்றான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/70&oldid=1303521" இலிருந்து மீள்விக்கப்பட்டது