பக்கம்:அன்பு மாலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

71

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

எண்ணத் தொலையாப் பேரின்பம்
எங்கே என்று தேடுகின்றார்;
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்
படைக்க மிகவும் முயல்கின்றார்;
கண்ணின் மணியாய் அருணையினில்
கவினார் ராம சுரத்குமார்
அண்ணல் தன்னைப் பணிமின்கள்
ஆகா தெலாம்போய் நலமுறுமே.

192

பண்ணப் பணைத்த- மிகப் பெருத்த,

சொல்லில் பொருள்போல் மலர்மணம்போல்
தூய நீரில் தண்மைபோல்
இல்லில் கணவன் மனைவிபோல்
இலங்கும் சிவனும் சக்தியுமே
நல்ல படியே அருள்பொழிய
நண்ணும் ராம சுரத்குமார்
வல்லன், எல்லாம் வல்லசித்தன்.
மலர்த்தாள் அடைந்தால் நலம்பெறுவீர்.

193

ஒன்றே நினைமின், ஒன்றையே
உள்ளத் தடைத்தே உறுதிசெய்ம்மின்;
ஒன்றே என்றும் உரைசெய்மின்;
ஒன்றே செய்து நலம்பெறுவீர்;
ஒன்றே என்ன உறுபொருளை
உறலாம் என்பான் அருணையினில்,
ஒன்றே காணும் ராமசுரத்
குமார்என் னும்பேர் உள்ளவனே.

194
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/77&oldid=1303487" இலிருந்து மீள்விக்கப்பட்டது