பக்கம்:அன்பு மாலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அன்பு மாலை

ஆற்றைப்போல் நெஞ்சத் தலைகள்போல் எண்ணம் அடங்குவரேல் கூற்றைப்போ கச்செய்யும் ஆற்றை அறிந்திடல்கூடுமன்றே
நீற்றைப் புனைந்த சிவபெரு மான்என நிற்கு மவன்
தேற்ற முறும்ராம் சுரத்குமார் பாதங்கள் சேருமினே. 79

ஆற்றை - வழியை. தேற்றம் - தெளிவு.

பந்தம் அகற்றப் பலமுறை கண்டு பயின்றிடுவீர்.
சந்தம் பலபாடிக் கோயிலில் வந்து தரிசியுங்கள்;
கந்தம் கொளுந்தார் அணிகின்ற தோளன் கருதுமொரு
தொந்தம் இலாதுறும் ராம சுரத்குமார் தூயவனே. 80
முறை - உபாயம். சந்தம் - பாடல். கந்தம் - நறுமணம் தொற்.
தம் - பிணைப்பு.


மாயைக்குத் தோற்றுமனத்திற்கடிமையாய் வாழ்பவர்கள்
சேயுற்ற தோற்றம் கொளும்ராம் சுரத்குமார் சேவடியைப்
போயுற் றடைந்து வணங்கினால் இன்பந்தான் புல்லுமன்றோ?
தாயுற்ற அன்பினைக் காணலாம் சற்றும் தளர்வின்றியே.81
சேய் உற்ற - குழந்தை போலுள்ள. புல்லும் - சேரும் தாய் உற்ற - தாயைப் போன்ற.

சொல்லுக்கடங்காச் சுகத்தினில் நிற்கின்ற சோதியவன்,
மல்லுக் கடங்காத பஞ்சேந் திரியம் வசப்படுத்தி
வெல்லுற்ற சூரன், அருணை நகரில் விளங்குபவன்,
கல்லும் உருக்கிடும் ராம சுரத்குமார் கண்ணியனே. 82

மல்லுக்கு - மல்லிடுதல் போலச்செய்யும் முயற்சிகளுக்கு.

சொல்லொன்று செய்கை பிறதொன்றாச் செய்யும் துரிசுடையோர் வல்லொன்று கின்றன ஐம்புலன்மாய்க்க வழியறியார்
கல்லொன்று வந்தாலும் உள்ளே கரைக்கும் கதியறிவான். சொல்லொன்று காட்டிடும் ராம சுரத்குமார் தூமுனியே.83

துரிசு - குற்றம், வல் - வன்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/42&oldid=1303378" இலிருந்து மீள்விக்கப்பட்டது