பக்கம்:அன்பு மாலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அன்பு மாலை


காலனார் வருமக் காலைக்
காதரம் போகும் கொல்லோ
தோல்வியொன் றில்லா ராம
சுரத்குமார் பாலே வம்மின்.

63

சால்பு - சான்றாண்மை, மால் - காமம், காதரம் - அச்சம்.


(எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


இடர்களையும் பெருமானை, எண்ண மெல்லாம்
ஈடேறச் செய்வானை, மயல்கள் போக்கித்
திடர்என்னும் பிறப்பறுக்க வழிசெய்வானைச்
சீதரனைச் சிவனவனைப் பிரமன் தன்னை
மடல்கெழுமும் மாலைபுனை மார்பன் தன்னை
வண்ணமுறு தலைப்பாகை வனைவோன் தன்னை
நிலைபெரிய ஞானியாம் நிமலன் தன்னை
நீள்ராம சுரத்குமார் தனைக்கண்டேனே.

64


இடர் - துன்பம், திடர் - மலை, மடல் - இதழ்.


அருணை நகர் மிகவாழி! அன்பர் வாழி!
அருள்செய்யும் பரமேசன் கருணை வாழி!
தெருள்நயந்த அன்பர்தம் கூட்டம் வாழி!
சீர்பெற்ற மங்கையர்கள் சிறந்து வாழி!
மருளில்லா வகையினிலே மணத்தைப் பேசும்
மனமுள்ளார் எண்ணங்கள் வாழி வாழி!
சுருள்கன்ற பெருஞானி யாகும் ராம
சுரத்குமார் பெரும்புகழ்கள் வாழி! வாழி!

65


தெருள்- தெளிவு, மருள் - மயக்கம், தம் மகளுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்தவர்கள் இதைப் பாடுகையில் சுவாமிகளிடம் வந்திருந்தார்கள், சுருள் நேர்மையின்றி முடங்குதல்.

(13–3—1979)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/38&oldid=1321861" இலிருந்து மீள்விக்கப்பட்டது