பக்கம்:அதிசய மின்னணு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுக் காவலர்கள் 71. விட்டு வெளியேறும் ஒரு சில மின்னணுக்களும் இடையில் யாதொரு தடையுமின்றி நேர்-மின்வாய்க்குப் பாதுகாப்பாக அனுப்பப்பெறுகின்றன. தவிரவும், குழலிலுள்ள வாயு அணுக்களும் தம்முடைய சில மின்னணுக்களை அவற்றுடன் சேரச் செய்கின்றன. இக்காசனத்தால்தான் ஒளிக் கற்றை தனக்குச் சரியான மின்சாரமாக மாற்றப்படவேண்டிய இடத்தில் உயர்ந்த-வெற்றிடக்குழல்கள் பயன்படுத்தப் பெறுகின்றன. குழலில் வாயு இருந்து மின்சாரத்திலும் சிறிது மாற்றம் ஏற்படின், நமக்குக் கிடைக்கும் படம் தவுருனதாகிவிடும். ஒளி மின்சாரக்கலங்களுக்கு ஒரு விசித்திரமான தன்மை யுண்டு. ஒளிக்கற்றை பிரகாசித்துக்கொண்டிருக்கும்பொழுது அவை "பார்ப்ப”தில்லை : ஒளிக்கற்றை உடையும்’ பொழுதுதான் அவை பயனுள்ளமுறையில் இயங்குகின் றன. ஒளிக்கற்றை உடைபட்டதும், அது தன்னுடன் இணைந்து இயங்கும் துணைக்குழல் இயங்குவதற்கு ஓர் அடையாளமாகின்றது. எடுத்துக்காட்டாக, திருடர்கள் வருவதை அறிவிக்கும் சாதனம் (burg'a alarm) இக்கார ணத்தால்தான் இயங்குகின்றது. - மேற்குறிப்பிட்ட சாதனத்தில் ஓர் ஒளிக்கற்றை வாயிற் படிகளிலோ, சாளரங்களிலோ, அல்லது வீட்டின் நடை பாதையிலோ, அல்லது மாடிப்படிகளிலோ குறுக்கே போகுமாறு செய்யப்பெற்றுள்ளது. இந்த வழிகளில்தானே கள்வர்கள் வருதல் கூடும்? இந்த ஒளி கண்காணு ஒளி யாக இருக்கும் என்பது வெளிப்படை. கள்வர்களின் கண்ணுக்கு இவ்வொளி தென்பட்டால், அவர்கள் அதன் மீது படாதவாறு போகக்கூடுமல்லவா? இந்த ஒளிக்கற்றை நடைபாதையின் குறுக்கே ஓர் ஒளிக்குழலின் எதிர்-மின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/79&oldid=735170" இலிருந்து மீள்விக்கப்பட்டது