பக்கம்:அடி மனம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனக்கோளாறு

3

பெருகத் தொடங்குகின்றன. இன்று நாமும் பட்டண வாழ்க்கையின் அநுகூலங்களோடு அதனால் ஏற்படும் தீமைகளையும் அநுபவித்து வருகிறோம். நமது வாழ்க்கையிலும் அமைதி குறைந்து வருகிறது. பரபரப்பும், இரைச்சலும், அர்த்தமற்ற வேகமும் எல்லா நாட்டிற்கும் பொதுவான அம்சங்களாக மாறி வருகின்றன. அதனால் எங்கும் இன்று மனக்கோளாறுகள் அதிகரித்து வரும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மனத்திற்கும், மூளைக்கும், நரம்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் அதிர்ச்சியைத் தரக்கூடிய எத்தனையோ காரியங்கள் இக்கால நாகரிக வாழ்க்கையில் நிகழ்கின்றன. வாழ்க்கையில் அமைதி குறைந்து வருகின்றது. உடல் உழைப்பைக் குறைப்பதற்கான யந்திரங்களும், தூரத்தை வெல்லக்கூடிய போக்குவரத்துச் சாதனங்களும் மனிதனுக்கு அதிகம் ஓய்வைக் கொடுத்து அமைதியைப் பெருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் நடைமுறையிலே அப்படியொன்றும் நிகழவில்லை. நவீன யந்திரங்களையும் சாதனங்களையும் அதிகமாகப் பயன்படுத்துபவர்களே மிகுந்த பரபரப்புடையவர்களாயும் அமைதி குறைந்தவர்களாயும் இருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த நவீன வாழ்க்கையோடு குடி முதலிய பழக்கங்களும் மன அதிர்ச்சியை விளைவிக்கிறது. காப்பி முதலிய பானங்களும் நாம்புகளுக்குக் கிளர்ச்சியைக் கொடுக்கின்றன; ஆனால் மதுபானம் செய்கின்ற தீமையே மிகுதி.

தீராத கவலை, சோர்வு, மனப் போராட்டம் முதலியவைகளும் மனக்கோளாறுகளுக்குக் காரணமாகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/8&oldid=1004396" இலிருந்து மீள்விக்கப்பட்டது