பக்கம்:அதிசய மின்னணு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 நம்முடைய மாட்டுத் தொழுவத்தில் பல எருதுகள் இருக்கின்றன. அவற்றை அவிழ்த்து வண்டியின் நுகத் திலோ ஏரின் நுகத்திலோ கட்டி ஒட்டாவிட்டால் அவற்றை நம் விருப்பப்படி இயக்கி வேலை செய்விக்க இயலாது. இதே முறையில்தான் அறிவியலறிஞர்கள் மின்னணுக்களை அடக்கி யாள்வதற்கு ஒரு வழியைக் காண வேண்டியிருந்தது. உட்கருக்களில் அவை ஒட்டிக்கொண் டிருப்பதற்குப் பதிலாகத் தாம் விரும்பும் இடத்திற்கு அவற்றை அனுப்புவதற்கு அவர்கள் ஒரு வழியைக் கண் டறியவேண்டி யிருந்தது. - அறிவியலறிஞர்கள் பல்வேறு சடப் பொருள்களை ஆராய்ந்தனர். சிலவித சடப் பொருள்களில் மின்னணுக் கள் எளிதாகக் கழன்று இயங்கும் என்றும், சில வகைப் பொருள்களில் மிகச் சிரமத்துடன் கழன்று இயங்கும் என் றும் கருதினர். ஏனைய பொருள்களைவிட உலோகங்களில் அவை எளிதாகக் கழன்று தம் விருப்பப்படி செல்லக் கூடி யவை என்றும், ஏனைய பொருள்களிலிருப்பதுபோல் அவை தம்முடைய உட்கருக்களுடன் இறுகப் பிணைந்திராத தால்தான் இவ்வாறு செல்ல முடிகின்றது என்றும் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/18&oldid=1426818" இலிருந்து மீள்விக்கப்பட்டது