பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அன்னை கஸ்தூரிபாயின்



தென்னாப்ரிக்கா வெள்ளையர்கள், தங்களை இழிவுபடுத்தி காந்தி போராடியதால், ஆத்திரம் அடைந்தனர். குடும்பத்தோடு காந்தி கப்பலை விட்டு இறங்கியதும் அவர்களைத் தாக்கத் தயாராக இருந்தார்கள்.

இதனால்,வைத்திய சோதனை என்ற காரணத்தைக் காட்டி அவர் பயணம் புரிந்து வந்த கப்பலைத் துறை முகத்திலேயே ஆங்கில அரசு நிறுத்தி விட்டது. இவ்வாறு நான்கு நாட்கள் கப்பல் கடலிலேயே காத்திருந்தது.

காந்தியடிகள் தனது குடும்பத்தினருக்கும், கப்பல் பயணிகளுக்கும் தைரியம் கூறினார். இறுதியாக, ஐந்தாவது நாளன்று கப்பலிலிருந்த அனைவரும் கரைக்கு வர அனுமதிக்கப்பட்டார்கள்.

காந்தி கரை வந்தால் ஆங்கிலேயர்கள் வன்முறையில் ஈடுபட ஆயத்தமாக இருக்கிறார்கள் என்ற தகவல் கப்பல் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனால், சூரியன் மறைந்த பிறகு காந்தி கரை வந்து சேர்ந்திடத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இவ்வாறு திருட்டுத் தனமாகக் காந்தி கரைவந்து சேர்ந்திட தாதா அப்துல்லா கப்பல் நிறுவன வழக்குரைஞர் லாப்டன் பிரபு விரும்பவில்லை. அதனால், லாப்டன் பிரபுவே தக்க பாதுகாப்புடன் காந்தியை அழைத்துக் கொண்டு கரை வந்து சேர்ப்பதாகக் கப்பல் தலைவருக்குத் தெரிவித்தார்.

கஸ்தூரி பாயும் குழந்தைகளும் கப்பல் நின்றிருந்த இரண்டு மைல் தூரத்திலிருந்து நடந்து வந்தே கரை சேர்ந்து ரஸ்தோம் ஜி என்ற காந்தியின் நண்பருடைய வீட்டிற்கு வந்தார்கள். அதற்குப் பிறகு காந்தியும் வழக்குரைஞரும் கப்பலை விட்டு இறங்கி பாதுகாப்புடன் கரை சேர்ந்தாார்கள்.