பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சம்பமும் சவடாலும் பேசினேனே?-பைத்தியக்காரி நான்!... அது போகட்டும். நீ கண் கலங்காதே, அம்மா. பாபு வந்திடுவான்; அவன் ரோசக்காரன் மாத்திரம் இல்லே; கெட்டிக்காரனும்கூட. இத்தனை நேரமாகியும், இன்னம் பாபுவைக் காளுேமேன்னு நானும்தான் உள்ளுக்குள்ளே கவலைப்பட்டுக்கிட்டிருந்தேன்!” என்று தாழ்.குரலில் சொன்னாள் நந்தினி. பாசத்தின் சோகம் முகத்திலும் அப்பிக் கிடந்தது.

"சாப்பிடேன், தந்தினி.”

“நீயும் வாம்மா, சாப்பிடுவோம்."

“நான் வரல்லே.”

"ஏனம்மா?”

"எனக்குப் பசி, இல்லே; நீ சாப்பிடு.”

“எனக்கும் பசிக்கல்லே!"

"உனக்குப் பசியெடுத்து ரொம்ப டைம் ஆச்சின்னு அப்பவே சொன்னியே?’’

“அது ஒண்னும் பொய் கிடையாது. தம்பிப் பயல் வந்தானதும், நானும் உன் கூடவேதான் சாப்பிடப் போறேன். ஆம்மா!’

“உன் பிரியம்!" கண் மூடிக் கண் திறப்பதற்குள்ளே, எப்படி இத்தனை சமர்த்துக்காரியாக ஆனளாம். இந்த நந்தினிப் பெண்? தம்பி என்றால், அக்காள்காரிக்கு ஏழாம் பொருத்தம் ஆயிற்றே? அவள் மனம் மாறியிருக்கிறதா? இல்லை, மாற்றப்பட்டிருக்கிறதா? தனக்குத் தானே பெருமைப்பட்ட பாவனையிலேயே, முகம் களை கட்டியது. தன்னுடைய அன்புச் செல்வங்கள் புடைசூழ, காலைச் சிற்றுண்டியைத் தொடங்கி வைக்கப்போகும் நல்ல

50