பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னை கஸ்தூரிபாயின்

62


பலவிதமான கொடிய வார்த்தைகளைப் பேசுவதாகக் கேள்விப்பட்டதால் தான், நான் எனது கருத்துக்களைக் கூற முன் வந்தேன்.

"சட்ட மறுப்பு இயக்கங்களில் ஈடுபடுவதால் உண்டாகும் துன்பங்களை சுமக்கமுடியாத முதுமை வயதை அடைந்து விட்டாள் என் மனைவி. எழுதப் படிக்கவும் அவளுக்குத் தெரியாது. ஆனாலும், அவள் விரும்பியபடி எதையும் செய்திட அவளுக்கு உரிமை உண்டு. இவ்வாறு நான் எழுதுவதைப் பார்க்கும் போது என் மனைவியைக் குறை கூறுவோருக்கு ஒரு வித ஆச்சரியம் ஏற்படும்.

"ஆப்பிரிக்காவில் இருந்தபோதும், இந்தியாவில் இருக்கும் போதும் என் மனைவி, தன் மனம் தூண்டிவிடும் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்வாள். தற்போதும் அப்படியே நடந்திருக்கிறாள். பேரன் மணிபென் சிறை புகுந்ததாகக் கேள்விப்பட்டாள். அவள் அதைப் பொறுக்க முடியாமல் உடனே, 'நானும் போராட்டத்தில் சேருகிறேன்' என்று என்னிடம் கூறினாள்.

"உனது உடல் நிலை சரியாக இல்லையே, நலம் குன்றி நடமாடுகிறாயே, பலவீனம் அதிகமாக இருக்கிறதே என்றேன் நான். சில மாதங்களுக்கு முன்புதான் அவள் டில்லியில் இருக்கும்போது, குளியலறையிலே உணர்விழந்து கீழே விழுந்தாள்.

"அந்த நேரத்தில் எனது மகன் தேவதாஸ், கலக்கம் அடையாமல் தாய்க்குரிய சேவைகளைச் செய்திரா விட்டால் அப்போதே அவள் இறந்து போயிருப்பாள். அதனால், சத்தியாக்கிரகத்தில் சேர வேண்டாம் என்று நான் கூறியதையும் அவள் எடுத்துக் கொள்ளவில்லை. உடனே புறப்பட்டுச் சென்று விட்டாள்.