பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேனோ?’ பாறாங்கல்லைக் கட்டி விட்டமாதிரி, கனத்தது: தெஞ்சு கணக்கும்போது, கண்களும் கணக்கவே செய்யும்: சுடுநீரின் முத்தங்கள் அவனுடைய கதுப்புக் கன்னங்களில் முத்தமிட்டன; ஒரு சொட்டுக் கண்ணீர், அவனது இடது கன்னத்துக்கு அவமானம் கற்பித்துக்கொண்டிருந்த அசிங்கமான கறுப்பு மருவில்-வடுவில்-மச்சத் தழும்பில் தவழவே அவன் நெருப்புச் சுட்டு விட்டமாதிரி பதறினான்; துடித்தான்; சுடுநீர் என்றால், சுடாமல் இருக்க முடியாதுதான்! திரும்பிப் பார்த்த அவனது பிஞ்சு மனத்தின் கூத்தரங்கில் மகேஷ் திரும்பிப் பார்க்கவே, அவன் தன்னுடைய கையிலிருந்த ஊது வத்தியை வீசி எறிந்தான், வீசியெறியப்பட்ட ஊது வத்தி மணக்குமா?- ஒ, அங்கே அம்மாவின் உருவம் நிழலாடுகிறது!-அதனாலேதான் மணம் பரப்புகிறது:

‘ஒமேகா’ பூஞ்சிட்டுக்குக் கடமை ஒன்றில்தான் கண்! இரவு மணி எட்டு ஆகி விட்டதாம்; சொல்கிறது.

மானிடர்களுக்குக் கண்ணெல்லாம் அவரவர்களின் சுய லத்திலேதான் கண் கொத்திப் பாம்பாகக் கட்டுண்டு கிடக்கிறது:

ஊதுவத்தி நெஞ்சுைத் தொட்டு நினைவைத் தொட்டு மணக்கிறது.

பாபுவுக்கு ஊதுவத்தி என்றால், சின்னஞ்சிறு பிராயம் முதலாகவே நிரம்பப் பிடிக்கும். அப்பா சொல்லித் தந்த பாடம் அது: நேற்றுச் சொன்னமாதிரி இருக்கிறது.

பாபு, இங்கே இந்தப் பரிசுத்தமான பூஜை அறையிலே கொலு இருக்கிற மாங்காட்டு ஆத்தாளோட சந்நிதானத்திலே மணம் பரப்பிக்கிணு இருக்கிற இந்த ஊதுவத்தியிலே தான் மனித வாழ்க்கையோட தத்துவமே அடங்கிக் கிடக்குது: மானுடப் பிறப்பு என்கிறது தவஞ் செஞ்சு கிடைக்கக் கூடியது; அப்படிப்பட்ட அபூர்வமான மனிதப்

172