பக்கம்:அனுமார் அனுபூதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 19. ஐயனே உன் பக்தியில் ஆழ்ந்துவிட்டால் வரமாக தவ ஞான யோக சித்தியெல்லாம் சித்திக்காதோ சர்குருவே மானுடம் தழைக்க வந்த மகா குருவே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


20. ராமனை நினைந்து நினைந்து ராமனே ஆன ராமநாதனே யோகநாதனே ராமஜோதியே சொல்லுக்குச் சொல் சுடர்விடும் ஜீவசக்தியே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


21. பகவான் சனி பற்ற வந்தான் நீ பற்றி எடுத்து விட்ட மூச்சில் விசும்பு கடந்து வீழ்ந்தான் அதுமுதல் உன் அடியவரை அவன் தொடுவதே இல்லை ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே