பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அன்னை கஸ்தூரிபாயின்


பீனிக்ஸ் என்ற இடத்திலே உள்ள தனது வீட்டுக்கு வந்து, இயற்கை வைத்திய முறையில் ஜல சிகிச்சை கொடுத்து, மனைவி உயிரைக் காப்பாற்றி விட்டார்.

காந்தி வீட்டிற்கு, அப்போது ஒரு துறவி வந்தார். டாக்டர் கூறிய புலால் ரசம் யோசனையை அந்தத் துறவியிடம் காந்தி கூறினார்!

சாமியார் பேசும்போது, ”புலால் உண்பதைச் சாஸ்திரங்கள் தடை செய்யவில்லையே! தாராளமாக இறைச்சியை உண்ணலாமே” என்று சாஸ்திர ஸ்மிருதியிலே இருந்த ஆதாரங்களை எடுத்துரைத்தார்.

துறவி கூறிய சாஸ்திரச் சான்றுகள் எல்லாம் இடைச் செருகல் என்று எண்ணிய காந்தி, துறவிக்கு ஏதும் பதில் கூறாமல், முன்னோர்கள் கடைப்பிடித்த புலால் உண்ணாமை என்ற கொள்கையைக் பின்பற்றினார்.

”நீங்கள் எத்தனை சாஸ்திர மேற்கோள்களை என்னிடம் எடுத்துரைத்தாலும், மாட்டிறைச்சிப் புண்ணிலே வடித்தெடுக்கப்பட்ட புலால் ரசத்தைப் பருகமாட்டேன். அதை உண்டு என் உடல் குணமடைய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கில்லை. என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள். என் கணவரோடும், குழந்தைகளோடும் இதைப்பற்றிப் பேசுங்கள். என் மனம் புலால் ரசம் விஷயத்தில் மிக உறுதியாக உள்ளது” என்று கூறிவிட்டார் கஸ்தூரிபாய்.

எதைக் குடித்தாகிலும், உண்டாகிலும் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ளும். மனிதர்களிடையே கஸ்தூர்பாய் பிற உயிர்களைக் கொன்று உண்டு தனது உயிரைக் காத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது எத்தகைய பண்பு பார்த்தீர்களா?

xxx