பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவலை. அட்சயப் பாத்திரத்தில் இருந்த இட்டிலிகளைச் சரிப்படுத்தும் கருமத்தில் கண் ஆனாள். என்னவோ மனக் கணக்குப் போட்டுப் பார்த்ததில், ஒர் இட்டிலி மாத்திரமே மிச்சக் கணக்குக் காண்பிக்கவே, “அத்தான், உங்களுக்கு இட்லி போதுமா? இல்லே...” என்று இழுத்தாள்.

அதற்குள் ஒரு தடுமாற்றம்: “இட்லி மீதம் இருக்குமா?” என்று கேட்டார். இட்டிலிக் கணக்கில், மகேஷை மறந்திருப்பாளோ? “நினைத்தீர்கள்; வந்துவிட்டேன்!” என்கிற போக்கில் மனிதர் பிரசன்னமாகிவிட்டால், கதை எப்படி முடியுமாம்? “ரஞ், கேட்டேனே?”

“ஒண்ணே ஒண்ணு மிச்சப்படலாமுங்க!”

“புள்ளி போட்டுப் பார்த்தியாக்கும்?”

“ஊம்”

“என்ன கணக்கு?”

“அடுக்கிலே அடுக்கி வச்சிருக்கக்கூடிய இட்லி பதினேழு, இதிலே, நந்தினிக்கு அஞ்சும், எனக்கு நாலும் போனால், பாக்கி எட்டு. பாபு மூணுக்கு மேலே சாப்பிடமாட்டான். மகேஷ் வந்திட்டா, அவருக்கும் நாலு இட்லி வேணும். இந்தக் கணக்குப் பிரகாரம் பார்க்கையிலே, ஒரேயொரு இட்லிதான் மிஞ்சும்; ஆதுதான் உங்களைக் கேட்டேன்!”

அவரது ஜீவன், தீக்கணப்பில் எதிர்பாராமல் கால் தடுக்கி விழுந்துவிட்டதெனத் துடித்தது. “ரஞ்! கொஞ்ச நேரமாய் நான் உன்னை ரொம்பவும் சோதிச்சிட்டேன்!” என்று நா தழதழக்க வருந்தினர் ரஞ்சித்.

ரஞ்சனி உருகினாள்: “தெய்வம் சோதிக்கிறதுதாங்க தருமம்! ...தெய்வம் சோதிக்கவேண்டியதுதானுங்க நியாயம்! ஆமாங்க, அத்தான்!” நன்றியறிவின் கண்ணீர் முத்தங்கள்

35