பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"இல்லேம்மா!’ - இதயத்தின் புயல் விழிகளில் சங்கமமாகிச் சுடுநீர் உருவாகிக் கொண்டிருக்கவே, ரஞ்சித் தடுமாறினார். இன்னுயிர் நேசக்கிழத்தி ரஞ்சனி கோப்பைகளை நகர்த்தியும் பிரித்தும் வைப்பதை, அவர் ஊன்றிக் கவனிக்கவும் செய்தார்: “ரஞ்!’

ரஞ்சனி அந்தப் பரசுராமரின் படத்தை எதிர்ப் பக்கத்தில் தொங்க விட்டாள். அவளுடைய நீல நயனங்கள் இப்போது துலாம்பரமாகவே-பரிசுத்தமாகவே காணப்படுகின்றன:

மறுபடி, முன்னை மாதிரி, சத்தம் கேட்டது.

பாபு!...

"அம்மா! நான் யார்?" என்று விதியாகிக் கேள்விக்சணே ஒன்றை அன்பான அன்னையின் அடிவயிற்றிலே-அவன் பத்து மாதம் குடியிருந்த அடிவயிற்றிலே வீசி எறிந்தான் பாபு.

ரஞ்சனி துளிகூட திடுக்கிடவில்லை. பூவும் பொட்டும் சிரித்தன!

ரஞ்சித் திடுக்கிட்டார்: அன்றாெரு நாள் பழனிமலையில், “நிஜமாகவே நீங்க என்னோட சொந்த அப்பாவாக இருந்திருந்தால், இப்படி வன்மத்தோட என்னை அறைஞ்சிருக்கவே மாட்டீங்க!” என்று பாபு வினையாக மாறிக் கேட்ட சுடுசொற்கள் மீண்டும் எதிரொலித்தன. சுட்டன.

"சொல்லு, அம்மா, தான் யார், அம்மா?"

‘'நீ பாபு!” என்றாள் அன்னை.


“அது தெரியும்; ஆனா, நான் யார்னுதான் தெரியல்லே!"

"பாபு.நீ என் பிள்ளை:எங்க பிள்ளையாக்கும்!"மகத்தான அன்பையும் பாசத்தையும், ஊசலாடிக்கொண்டேயிருந்த தன்-

198