பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்கிற சக்திக்கும் தத்துவத்துக்கும் உயிரும் உடம்புமா அமைஞ்ச ஒரு சாட்சி மாதிரி, பேசிக்கிட்டு இருக்கிறது தான் என் அப்பா. தன்னோட அன்பான உசிரைத் தன் அன்பான அத்தான் கையிலே- ஆமாண்டா, என் அப்பா கையிலே ஒப்படைச்சிட்டு நிம்மதியாய், பூவும் பொட்டுமாக இருக்காங்களே, அந்தச் சீதேவியேதான் என்னைப் பெற்ற புண்யவதி!"

பாபுவிடம் மன்னிப்புக் கோரிய சக்கரவர்த்தி, கைகளைக் குவித்துப் பாபுவின் பெற்றாேர் அமர்ந்திருந்த திசைக்கு “ஒரு கும்பிடு கொடுத்தான். "நான் புறப்படறேன், பாபு" என்று பயணம் சொல்லிக் கொண்டான்.

“வண்டியிலே போறீயா, அசோக்?” ‘இண்ணைக்குப் போயிடலம்:நாளைக்குதான் வண்டிக்கும் வாசிக்கும் எங்கே போவேன்?” -

“சரி, நீ புறப்படு: நான் எங்க அம்மாவுக்காக டாக்டரை வரவழைக்கணும்’, என்று கூறி, நண்பனுக்கு டாடா சொன்னான்.

‘அம்மாவைப் பத்திரமாய்ப் பார்த்துக்கிடு, பாபு:’

‘ரொம்பத் தாங்க்ஸ்!’’

திரும்பும் போதும், பாபுவைப் பரசுராமர் சந்தித்தார்:

இந்தினி விலாசம்,

அடுக்கு: மூன்று

மேல்நாட்டுப் பாணியில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்டது அந்தக் கூடம்.

194