பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

29



சில நாட்கள் கழித்து டப்ளின் நகரில் உள்ள டாக்டரிடம் இருந்து காந்திக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் கஸ்தூரி பாய் உடல் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்றும், எழுந்து உட்கார முடியாத நிலையில் அவரது உடல் உள்ளது என்றும், ஒரு முறை அவருக்கு மயக்கம் ஏற்பட்டு விட்டது என்றும் எழுதியிருந்தார்.

உடனே காந்தி அங்கிருந்து தொலை பேசியில் பேசி அவர் உடல் நிலை பற்றி விசாரித்த போது, டாக்டர் காந்தியிடம் 'உமது மனைவிக்கு மாட்டிறைச்சி சூப் கொடுக்கலாமா? என்று கேட்டார். அதற்கு காந்தி கஸ்தூரி பாயைக் கேளுங்கள் என்று பதில் கூறிவிட்டார்.

"நான் நோயாளிகளைக் கலந்து யோசிக்க முடியாது. நீங்களே நேரில் வரவேண்டும். எனது விருப்பப்படி உணவு தராவிட்டால் உமது மனைவியின் உயிருக்கு நான் பொறுப்பல்ல" என்று டாக்டர் காந்தியிடம் கூறினார்.

காந்தி உடனே டப்ளின் நகருக்கு வந்தார். அவரைப் பார்த்த டாக்டர் ”உமது மனைவிக்கு மாட்டு சூப் கொடுத்து விட்டேன்” என்றார்.

'டாக்டர் இது பெரிய நம்பிக்கைத் துரோகம்" என்று காந்தி கூறினார்.

”நோயாளிக்கு மருந்து தருவதும் பத்தியம் சொல்வதும் டாக்டரின் உரிமை. இதில் ஏதும் நம்பிக்கைத் துரோகம் இல்லை. நோயாளி உயிரைக் காப்பாற்றுவது தான் டாக்டரின் கடமை” என்றார் டாக்டர்.

நல்ல எண்ணத்தோடு, ஓர் உயிரைக் காப்பாற்றவே டாக்டர் தனது கடமையைச் செய்தார் என்று சிந்தித்த காந்தி, ”டாக்டர் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதை என்னிடம் கூறுவீர்களா? எனது மனைவிக்கு மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி தருவதை நான் விரும்பவில்லை. அவள்