பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித்தின் கெடுபிடிப் பேச்சு, ரஞ்சனியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. கலவரம் சூழ்ந்திட, இம்மிக் கணக்கில் விழிகளைப் படிப்படியாக உயர்த்தி, ஒரு நம்பிக்கையோடு, அருமையான பிள்ளை பாபுவை அருமையாகப் பார்த்தாள்.

பாபுவா, கொக்கா?-அவன் அசையவும் இல்லை; அசைந்து கொடுக்கவும் இல்லை.

பாபுவின் இந்தச் சோதிப்பிலும் எப்படியாகிலும் தப்பி விட்டால் தேவலாம்:- ரஞ்சனியின் பெண் உள்ளம் தடு மாறியது; பொட்டுப் பொழுதுதான்; நிலையை உணர்ந்தாள்: பாபுவை நோக்கி நடந்தாள்; நடந்தவள், நின்முள்; நின்றவளின் பார்வையில் பாபுவும் ஆண்டியாகவே தரிசனம் கொடுத்தபின், அந்த நிகழ்ச்சி அவள் நெஞ்சில் மின்னலடிக்காமல் எப்படித் தப்பமுடியும்?

இடம்: பக்திச்சுவை சொட்டும் பழனிமலை ஆண்டியின் திருச்சந்நிதானம்.

நேரம்: மனம் கவரும் ரம்மியமான இளங்காலப் பொழுது.

“அப்பனே!" ரஞ்சனியின் குரல் தழதழத்தது. தரிசனம் முடிந்து, குருக்கள் நீட்டிய விபூதியைப் பூசிக்கொண்டு, பிரசாதமும் கையுமாக கணவர்மற்றும் குழந்தைகளோடும், குடும்ப நண்பர் மகேஷோடும் கோயிலைச் சுற்றி வலம் வந்த போது, நெற்றியில் பூசப்பட்டிருந்த திருநீற்றின் துகள்கள் காற்றில் சிதறி அவள் கண்களில் வீழ்ந்தன; எரிவும் கரிப்பும் மிஞ்சின; சுடுநீர் புரண்டது: தடம் மாறிஞள்: தடுமாறினாள ரஞ்சனி.

மகேஷ் கவனித்துவிட்டார். ‘ஆ’ என்று பதறிப் போனார்; பின்னுக்குத் திரும்பினர்; ரஞ்சனியை நெருங்கினார்; அவளது நெற்றியில் அப்பிக் கிடந்த விபூதியை

அ-4

53