பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சனியால் தைத்த முள்ளின் புரையோடிய வலியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

பாபுவின் இதழ்கள் அசைந்த அரவம் கேட்டதும், அரவம் கண்ட பாவனையில் நடுநடுங்கி நிமிரிந்தாள் பெற்றவள்.

“அம்மா. கண்ணுக்குத் தெரியாத தெய்வத்தாலே மட்டுந்தான் வரம் கொடுக்க முடியுமா?” என்று வினாச்சரம் தொடுத்தான் பாபு. “ஏன், கண்ணுக்குத் தெரிகிற மனுசங்களாலேயும் வரம் கொடுக்க முடியாதா, அம்மா?” என்று தொடர்ந்தான்.

“முடியுமா?”

“முடியாதா?”

“எப்படி முடியும்?”

“எப்படி முடியாது?- சொல்லேன், அம்மா!-அப்பாவை நீ கலியாணம் பண்ணிக்கிட்ட அந்த நாளிலிருந்து இந்த நாள் பரியந்தம், அப்பா உனக்கு ஒரு வரத்தை ஒரேயொரு வரத்தைக் கூடவா வழங்கவில்லை?-நெஞ்சிலே கையை வச்சுச் சொல்லேன், அம்மா!”

திரும்பவும் ‘விதி’ கணை தொடுக்கிறது.

திரும்பவும் நெஞ்சின் மரண வலி விதியாகத் திரும்புகிறது.

ரஞ்சனி கதறுகிறாள்: “எனக்கு உயிர்ப் பிச்சை தந்து, மடிப் பிக்சை தந்த என்னோட அன்புத் தெய்வம், ஆமா உன்னோட அன்பான அப்பா எனக்கு மனப்பூர்வமாய் வழங்கிய மகோன்னதமான வரமே நீ தாண்டா, பாபு!”

168