பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாரனம்புகள் என்மீது வசரி வாரி வீச நீகண்பாராயோ ? வந்து சேராயோ ?


“இரவே நீ ஓடோடி வா !” என்று இதழோடு இதழ் அசைத்து மெனன மொழி மூலம் கேட்டுக் கொண்டது இயற்கை. இரவு வந்து சேர்ந்தது.


நிலவுக்கன்னியை ஆசையுடன் எதிர்பார்த்திருந்தாள் மேகலை, தோழி ஒருத்தி அவளுக்கு வேண்டாமா ? அவளுக்குத் தோழியாக அமைய ஓடோடி வந்தவள் சிந்தாமணிதான்,


மேகலை’ என்று விளித்தாள் சிந்தாமணி.


மேகலை ஏறிட்டுப் பார்த்தாள். கண் கடையில் மென்னகை படர்ந்திருந்தது.


‘பால் சாப்பிடு, மேகலை’


வயிறு காலியாக இருந்த உண்மை அவளுக்கு நினை ஆட்டப்பட்டது. காலையிலிருந்து மேகலை நோன்பு இருந் தாள். தாலிகாக்க விரதம் காத்தாள், ‘மாங்கல்ய தாரணம்’ நிகழ்ச்சிக்குப் பிறகு பால் பழம் கொடுத்தார்கள் கணவன் மனைவி இருவரும் தனித்தனியே உட்கொண்டனர். உயிரும் உயிரும் இரண்டறக் கலக்க வேண்டுமென்பதற்கு முதல் சாதனையாக அமையவிருக்கும் எதிர்காலச் சடங்கை எண்ணினாள், வெட்கம் வெட்கமாக வந்தது. கணவன் சாப்பிட்ட எச்சிலைதான் உண்ண வேண்டுமென்ற நினைவு அவளுக்குப் புத்துணர்வு தந்தது.