பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$30


ஹல்லோ, மாமல்லன் !” என்ற அழைப்புக் கேட்டது அவன் ஏறிட்டுப் பார்த்தான். “பிளிமத் பட்டொளி வீசி நின்றது. காரின் கதவை காரோட்டி திறந்து விட திருமாறன் வெளியே வந்து நின்றதை மாமல்லன் கண்டான். அவனுக்கு வியப்பு மேலிட்டது, திகைப்பு பின் தங்கியது.


‘மாமல்லன், நான் ஏன் உங்களுடன் வரவில்லை தெரியுமா...’


சொல் மாறன்!’


பூஜை வேளையில் புகுவதற்குக் கரடிக்கு வேலை இருக்கக் கூடாதல்லவா ?”


“நாங்கள் பூசை செய்வதாயிருந்தால்தானே, நீ கரடி யாவதைப் பற்றியோ, அங்கே நுழைவதைப் பற்றியோ யோசனை பண்ணியிருக்க முடியும்...!”


“என்னவோ, உங்கள் தனிமையில் குறுக்கிட நான் விரும்பவில்லை. ஆங்கிலேயர்களுக்குத் தேநிலவுப் பயணத் துக்கு எத்தனையோ பாதைகள் வழி திறந்து கிடக்குமாம்! அது போல அமைய நம் தமிழ்ச் சாதி அனுமதிக்காது போனாலும் இம் மாதிரிப் பயணங்கள் வாழ்க்கைப் பயணத்துக்கு ரொம்பவும் உதவும். வாழ்வின் பங்குதாரர் கள் ஒருவரை யொருவர் நன்கு புரிந்து கொள்ளவும் பயன்படும்.’’ என்று பேசினான் திருமாறன்.


மாமல்லனின் சித்தம் குலோத்துங்கன் வரைந்து சென்ற சித்திரத்துக்கு ஓடியது. தலை கனத்தது. நண்பனை அழைத்துக் கொண்டு விடுதி அறைக்குள் பிரவேசித்தான். பிரியாணிப் பொட்டலங்கள் பிரிந்தன. பிளாஸ்கிலிருந்து காப்பி வழிந்தது. காப்பியைச் சுவைத்துக் கொண்டிருந்த மேகலை, இருந்தாற்போல மயங்கித் தரையில் சாய்ந்தாள்.