பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#79


வில்லை, விளக்கம் கேட்கவும் வினயம் புரியவில்லை. தவித்தான்.


மேகலையின் உடம்பில் காணப்பட்ட தீச்சுட்ட பகுதி கள் அவனை மேலும் புண்படுத்தின. ‘மேகலை உன் மணசை நோகச் செய்த நானல்லவா தீக்குளி நடத்தி உன் மன்னிப்பைப் பெற வேண்டும் ?. மாமன் மகளே, தசரதர் மைந்தனுக்குக் கிடைத்த ஜனக புத்திரி வின் னில் உலவிய படைப்பு. ஆனால் நீ மண்ணில் பிறந்தவள். மாண்பு கொண்டவள் வெண்ணிலவு நீ எனக்கு, மேவு கடல் நான் உனக்கு ! நீ இல்லையென்றால், நான் இல்லை, நீ என்னை விட்டு மட்டும் எங்கும் பிரிந்து விடாதே ... என் அமைதிக்கென நீ கையடித்துக் கொடு, மேகலை, கையடித்துக் கொடு!”


அன்றைய இரவில் மேகலை-மாமல்லன் இருவருடைய ஜீவன் களும் சங்கமித்தன.


சிந்தாமணி மறுநாள் காணப்படவில்லை. அவள்


எழுதிச் சென்ற கடிதத்தை மட்டும் காணமுடிந்தது. எடுத்துக் கொடுத்தவள் கோசலை அம்மாள். .


‘எல்லையில்லாத அன்பு சொரியும் மேகலைக்கு,


தாயே, என்னை மன்னிக்கமாட்டாய ஊழ்வினைப் பயனால் புத்தி தடுமாறியிருக்கும் என் அத்தானை நீ மனம் வைத்தால் மன்னிக்க முடியாதா?. என் அத்தானைத் தேடி பிடித்து பழி வாங்கும் பொறுப்பு என்னுடையது.


அபாக்கியவதி சிந்தாமணி.”


தன் கண்களைத் துடைத்து விட்டு, கொண்டவனின் விழி நீரையும் ஒத்தியெடுத்தாள் மேகலை. அத்தான்