பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய் - நன்நெஞ்சே ‘


மேகலை “ஆமாம், நேற்றைக்கே வந்திட்டாங்க இரவு இங்கேதான் படுத்துத் துரங்கினாங்க ‘ என்று இதமாகப் பதில் சொன்னாள்.


மாமல்லன் உறக்கம் கலைந்து இரண்டு மூன்று வினாடிகள் தாம் கழிந்திருக்கும். அதற்குள் பேச்சரவம் காதில் படவே, எழுத்து தலையணையில் முழங்கைகளைப் பதித்தவண்ணம் உட்கார்ந்திகுந்தான், குலோத்துங்கனின் ஞாபகம் வரவே, அவன் படுத்திருந்த இடத்தை நோக்கிப்


பார்வையை மாற்றினான். அவனைக் காணோம் ! எங்காவது போயிருக்கக் கூடுமென்று நினைத்த


மாமல்லன், வந்திருந்த சிந்தாமணியை வரவேற்க எண்ணி படுக்கையைச் சுற்றியபோது, அவன் பேருக்குக் கடிதத் துண்டு ஒன்று இருந்தது.


‘ஐயா !


என் உயிரைக் காட்டிலும் என்னுடைய லட்சியக் கனவு முக்கியம். ஆதலால், நான் வாழத்தான் வேண்டும். அதற்காகவே இங்கிருந்து வெளியேறுகிறேன்.


இப்படிக்கு, குலோத்துங்கன்,