பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 51


  • சிரியுங்கள் 1:


மேகலை, உன் சிரிப்பில் ஜீவனைக் காணோமே ?”


“உங்களிடம் அடைக்கலப் பொருளாகிவிட்ட என் ஜீவனைத் தான் நீங்கள் நித்தமும் உயிரோடு சாகடித்துக் கொண்டு வருகிறீர்களே, அத்தான் ?”


மேகலை !’ ‘ஏன் அப்படிப் பதற்றம் காட்டுகிறீர்கள் அத்தான்’ “உன்னுடைய பேச்சு என்னைச் சுட்டு விட்டது,” “ஆம், கசப்புத் தரும் உண்மைக்குச் சுடவும் தெரியும்!” “நீ இப்பொழுது என்ன பேசுகிறாய் மேகலை!”


‘நீங்கள் என்னிடம் பேச வேண்டியதை, பேச மறந்ததை, பேசத் தவறியதைத்தான் நான் உங்களிடம் எடுத்துரைக்கிறேன்.'”


‘உன் பேச்சு அழகுத் தமிழில் இருக்கிறது !’


‘சங்கத் தமிழ் மொழியில் ஏட்டில் எழுதிக் கொடுத் திருக்கும் திருவிளையாடல்கள் கொஞ்சமா, நஞ்சமா ? அத்தகைய தெய்வத் தமிழ் என்னை மட்டும் கைவிட்டு விடுமா, அன்பரே ? அழகுப் பண் பள்ளியறைப் பதுமை மட்டுமல்ல, அமைச்சராகப் பணியாற்றும் பொறுப்பும் அவளைச் சார்ந்ததல்லவா ?”


“படித்திருக்கிறேன், மேகலை !’


நோன் இப்போது செயல் வடிவில் இறங்கப் போகிறேன், அவ்வாறு மாறும்படி நீங்கள் என்னை இயக்கி விட்டிருக்கின் lர்கள்.”


  • உன் குரல் கூத்து மேடைப் பேச்சாகத் தொனிக் கிறதே ?”


அ-11