பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44


கட்டிலருகே வந்து ‘அத்தான், உங்களுக்கு அலுப் பாக இருக்குமில்லையா ? முதலில் காப்பியைக் குடியுங்க. பிறகு பல் விளக்கி பலகாரம் சாப்பிட்டு விட்டு ஒரு மூச்சு துரங்குங்கள். அப்பால் குளித்துக் கொள்ளலாம் இன்னைக்குத்தான் உங்களுக்கு லீவாச்சே : என்று யோசனை கூறினாள் மேகலை.


எவ்விதமான சலனமும் இல்லாமல் எப்படி அவ்வளவு அமைதியாகப் பேச மேகலையால் முடிகிறது ? ஒரு கால் எதுவும் இ ைட .ெ வ ளி யி ல் நடக்கவில்லையோ ?-- “ஈஸ்வரா !”


அப்போது மாமல்லனின் மனத்தில் பயங்கரமான முடி வொன்று முளைத்தது. ‘ம்... !’


‘நான் புது மாமல்லன். ஆமாம், நான் நூதமான மாமல்லன் ...விந்தை நிகழ்ச்சிகள் கக்கிய நச்சுப் பொய் கையில் அழுந்தி எழுந்த என் உள்ளம் என்னுடைய உடலையும் உருமாற்றி விட்டிருக்கிறது. மனிதனின் மாற்றத்துக்குக் காரணம், அவன் அமையும் பகைப் புலன் அமைப்பு என விளக்கவுரை தந்து மனிதனுக்குத் தற்காப்புக் கருவியாக அவதாரம் புரியும் அதே மணி மொழி என்னையும் என் சடலத்தையும், மனத்தையும் மனத்தின் மனச்சான்றையும் மாறுதல் கொள்ளப் பணித்து விட்டன. என்னுள் இயங்கி, என்னை இயக்கும் உணர்வுகள் மாற்றம் பெற்றன. நான் புது மாமல்லன் ஆனேன், ஆக்கப்பட்டேன்’ -


இரவு வந்தது.


முகூர்த்தப் புடவை முத்துச் சிரிப்புச் சிந்த, மோகனப் புன்னகை மோடி கிறுக்க, உடன் வர மறுத்த நிலவுப் பாவைக்குத் தாக்கீது அனுப்பிய கோலத்தை சிமிழ் உதடுகள் ஏந்த, ஒன்று இரண்டாகி அந்த இரண்டையும்