பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

-


பேற்றுப் பிழைத்தாள் மேகலை. குழந்தையையும் மேகலையையும் தாய் வீட்டிலிருந்து அழைத்துவர அரியலூருக்குப் புறப்பட்டான் மாமல்லன். திருமண ஏற்பாடுகள் சம்பந்தமாக திருச்சியிலிருந்து உறவினர்களை அழைக்கக் குலோத்துங்கனும் மாமல்லனுடன் தொடர்ந் தான். அவன் நேரே திருச்சிக்குப் போக் வேண்டியவன்.


மாமல்லன் அரியலூரில் விடை பெற்று இறங்கி மாமனார் வீட்டுக்குச் சென்றான். கனவும் கர்த்லும் சமைத்துக் கொடுத்திருக்கின்ற தன் குழந்தையை - GDణ్ణణా603ణి பரிசுப் பொருளை கருத்தில் தேக்கி மகிழ்ந்த நாட்களை எண்ணியவனாக வாழ்வு வந்த மனையை மிதித்தான். மனம் எக்காளமிட்டுச் சிரித்துக் கொண் டிருந்தது மேகலையை அழைத்தான். அவள் வரவில்லை. அவளைப்பற்றிய அறிவிப்பு வேந்தது.


மலைக் கோட்டைப் பிள்ளையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றிய பிறகே பட்டனத்துக்குப் புறப்படவேண்டிய மேகலை திருச்சிக்கு விடிகாலை வண்டியில் - அதாவது, மாமல்லன் இறங்கி வழியனுப்பிய அந்த ரெயிலில் குழந்தையுடன் சென்றிருப்பதாகச் செய்தி சொன்னார்கள்.


அடுத்த மூச்சுப் பிரியும் தருணம், மருதையாற்றில் ரெயில் கவிழ்ந்த விவரம் கிடைத்தது.


அரியலூகில் ரெயில் விபத்துக்குப் பலியான உயிர்கள் பலவற்றுள் குலோத்துங்கன், மேகலை ஆகிய இருவரின் உயிர்களும் கணக்கில் அடங்கின.


வெண்ணிலவின் வண்ணச் சுடரொளியில் அன்பு முகம் புதைத்து ஒளிக்காட்டிக்கொண்டிருக்கிறாள் மேகலை நித்தம் தான் காணும் அரிய காட்சி இது. ஆனால், மேகலைக்கு மாங்கல்ய பாக்கிகம் அளித்த மாமல்லன் அவளை ஒரு முறைகூடப் பார்க்க முடியவில்லையாம் !


ஓர் இரகசியத்தை எண் ணிப் பார்க்கிறேன். இன்று வரை அது எனக்குப் புரியாத புதிராகத்தான் தோன்று கின்றது விபத்துக்கு இலக்கான துரத்துக்குடி எக்ஸ்பிரஸ்’ இணைப்பின் கடைசிப் பெட்டியிலிருந்து மேகலை கட்டாயம் தப்பித்திருக்க முடியும். அந்தப் பெட்டி பத்திர மாகக் காப்பாற்றப்பட்டது. ஆனால், மற்ற பெட்டிகள்