பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42


“குலோத்துங்கன், ஏன் இங்கே வந்தீர்கள் ? வெறி பிடித்த வெஞ்சினத்துடன், திறந்து வாய் மூடாமல், இரை தேடி, இறைவனின் துணை நாடாது. சித்தத்தில் அழித் தெழுதாச் சித்திரமெனத் தோன்றிய சித்திரப் பாவை யினால் என் சித்தம் குலைந்தது. என் உடல் சீரழிந்து, எனக்கு உடையவளால் என் ஆவி அடங்க வாய்ப்புத் தராமல், என்னை நானே அழித்துக் கொண்டிருக்கும் இத்தகைய அவல நிலையிலே- பயம் சுக்கும் சூழலிலே நீர் ஏன் வந்தீர் ? பேசாத பதுமையான நீங்கள் என்றைக்கு இதழ் விலக்கப் போகிறீர்கள் வெண்ணிலவிலே மையிருட்டு சங்கமம் ஆகிவிடும் தருணத்திலா ? அல்லது, வீசுந்தென்றல் விசை மிகுந்த சூறாவளியைக் கட்டிப் பிடித்து ஐக்கியமான பின்னரா ?. ஆண்டவன் அருளிய மனிதத் தன்மையை அவனுக்கே திருப்பிக் கொடுத்து விடும் வள்ளலாக ஆக நான் விரும்பவில்லை, ஆகவே, என்னுள் நான் உழுது பயிரிட்டுப் பண்படுத்திக் கொண்டிருக்கும் அந்த மனிதப் பண்புக்குச் சோதனை யாளராக நீர் மாறி விடுமுன், இங்கிருந்து போய்விடும் ? உடன் பிறவாத சகோதரி சிந்தாமணியின் அணுகிய நோக்கிலே என்னைத் தவறிழைத்தவனாக ஆக்கி விட்டுத் தான் இங்கிருந்து விடை பெற்றுப் புறப்படப் போகின்றீரோ, என்னவோ ? எனையாளும் ஈசனே ! உன் முடிவை நான் அறியலாகாதா ?


மேகலை இருவருக்கும் காப்பி கொண்டு வந்து வைத்தாள், அருந்துமாறு கோரினாள். கொண்டவனிடம் காட்டப்பட்ட குழைவு, ஒண்ட வந்தவனிடம் மாற்றுக் குறையாமல் விலை போனது,


அமைதியைப் பறித்து இடுப்பில் செருகிக் கொண்ட “கனா நினைவுப் புண்ணை கோலிட்டு வேதனைக் குள்ளாகியது.