பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5恐 அறிவியல் பயிற்றும் முறை ஒரு குறிப்பிட்ட அறிவியல் துறையிலுள்ள விதிகளே நன்கு கற்றுவிட்டால் அறிவியல் முறை'யால் பெறும் திறன்கள் அனேத்தும் கைவரப்பெறும் என்ற கொள்கையும் நிலவுகின்றது. இது தவறு : பெருந் தவறுங்கூட. அறிவியல் கற்பதால் அத்திறன்களே நேரிய முறையில் நேரடியாக அடைய வேண்டுமேயன்றி, வேறு முறையில் பெற இயலாது. பாடப்பகுதிகளே மனப்பாடமாகக் கற்றலால் அவை கைவரப்பெரு. அறிவியல் கற்றலால் ஓரளவு அத் திறன்கள் அமையும் என்பது உண்மையாக இருப்பினும், அவற்றை அறிவியல் முறைப்படி கற்ருல்தான் அத் திறன்கள் நிரந்தரமாக ஒருவரிடம் அமையும் என்பது உறுதி. அறிவியல் கற்பதனால் வேண்டப்படுவதெல்லாம் சிந்திக்கும் ஆற்றலே சிந்திக்கும் ஆற்றல் முறையாகக் கற்பதால்தான் ஏற்படும். புதிய பாடப் பகுதிகளைக் கற்றல் இரும்பு துருப்பிடித்தல் என்ற பாடம் பிற அாடப் பகுதிகளைக் கற்பதில் கொண்டுசெலுத்தவுங் கூடும். இந்தப் பிரச்சினேயைத் தீர்ப்பதில் பிற பிரச்சினேகளும் எழுதலேக் கண்டோம். துருவுக்கும் இரும்புக்குமுள்ள வேறுபாடு யாது ? என்பதன் விடையை இன்னும் காணவில்லை. பொருள்கள் எரிதலர்ல் என்ன நேரிடுகின்றது ?’ என்ற வினவுடன் இதை ஒப்பிட்டு ஆராய்ந்தால், இரண்டிலும் பயன்பட்ட காற்றின் அளவிலிருந்து உண்மை புலனுதல் கூடும். இதல்ை ஆக்ஸிஜன், அதைத் தயாரித்தல், ஆக்ஸைடின் இயைபு, உப்பு மூல ஆக்ஸைடுகள், அமில ஆக்ஸைடுகள் முதலிய பகுதிகளைப் படிக்க நேரிடும் ; இதனுல் பல்வேறு பிரச்சினைகள் நம் சிந்தனையில் எழும்.