பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 அறிவியல் பயிற்றும் முறை துருப்பிடித்தல் தகட்டின் வெட்டுவாயில் தொடங்குகின்றது என்பதைக் காணலாம். இரும்பு - அரத்துரள்கள் துருப்பிடிக்கின்றன் : குழாயிலும் ஒரு குறிப்பிட்ட அளவுவரை நீர் ஏறுகின்றது. 5. கருதுகோள்கள் . இதுகாறும் அறிவியல் முறையை ஒரு குறிப்பிட்ட போக்கில் விளக்கிைேம். ஆனால், இதுதான் அறிவியல் முறையின் போக்கு என்று கருதுதல் தவறு. சில பிரச்சினேகளைத் தீர்ப்பதற்கு இப் போக்கை மேற்கொள்ளலாம் : இன்னும் சிலவற்றிற்கு 'கருதுகோள்கள்’ என்ற படியை மேற்கொள்ளவும் நேரிடும். இப் படி எடுகோள்களேத் திரட்டும் படிக்கு முற்பட்டதாகும். எனவே, பிரச்சினை அறிவிப்பு, கருதுகோள், எடுகோள்களைத் திரட்டுதல், எடுகோள்களின் விளக்கம், விதிகளே உண்டாக்குதல், விதிகளைப் புதிய செயல்களில் பொருத்திப் பார்த்தல் ஆகியவை அறிவியல் முறையின் படிகளாகும். ‘பனி உண்டாதல்’ என்ற பிரச்சினையை எடுத்துக்கொண்டு இம்முறை தெளிவாக விளக்கப்பெற்றுள்ளது. அன்பர்கள் அதைப் படித்து உணர்வார்களாக. - கருதுகோளே மேற்கொள்ளும்பொழுது அடியிற் கண்ட திறன்கள் செயற்படும் : - (1; எடுகோள்கள் எடுத்துக்கொண்ட பிரச்சினேக்கு உரியவை தாமா என்று முடிவுகட்டும் திறன் : (2) கருதுகோளே ஆக்குவதில் தனித் திறன் ;

  1. (3) கருதுகோளேச் சோதித்தற்குச் சோதனைகளே அறுதியிடும்

திறன் ; (4) கருதுகோளே கம்பகமான வேறு மேற்கோள்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் திறன் : (5, புதிதாகக் கிடைக்கும் எடுகோள்கட் கேற்றவாறு கருது கோளே மாற்றியமைக்கும் திறன். வகுப்பில் கற்றலில் கடைமுறையில் பெரும்பாலும் இப் படியை மேற்கொள்வதில்லே எடுகோள்களிலிருந்து உடனே முடிவுகாணுதல் மேற்கொள்ளப்பெறுகின்றது. பாடத்திட்டத்திலுள்ள பிரச்சினேகள் மிக எளியனவாகவும் வெளிப்படையாகவும் இருத்தலால் இந் நிலை ஏற்படுகின்றது. உயர்நிலப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சில பகுதிகளில் தான் இப் படியை மேற்கொள்ளலாம். கருதுகோளே உருவாக்கி அதைச் சோதித்தலில் செயற்படும் திறன்கள் கவின வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவையாகும். இதனுல் உயர்கிலேப் பள்ளிகளில் பயிலும் மானுக்கர்கள் பெரும் பயன் எய்துவர். இதனுல் பெறும் பயிற்சி வாழ்க்கைத் துறைகளில் 1. Burniston Brown, G : Science : Its method and its philosophy ի ի. 122-137. -