பக்கம்:அறிவியல் விருந்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

li ஈடுபடுத்தினான் போலும்: 1930-இல் என் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையின்போதிருந்தே என்னை அறிந்தவர் கள்; எனக்குக் கலைத்தந்தையாகவும், கல்வித்தத்தை யாகவும், வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் இருப்பவர்கள் இத்தகைய மூதறிஞர்பால் யான் கொண்டுள்ள பேரன் பிற்கும் பெருமதிப்பிற்கும் அறிகுறியாக அன்னார் பொன்னார் திருவடிகளில் இந்நூலை அன்புப் படைய லாக்கிப் பெருமைகொள்கிறேன். அன்னார் ஆசியால் பல இளம் உள்ளங்களில் இந்நூல் பல நல்லெழுச்சிகளை விளைவிக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு என்னுள்ளே தோன்றாத்துணையாக இருந்து இச் சிறுநூலை வெளியிட என்னை இயக்கியருளிய எல்லாம் வல்ல இறையருளை மனம், மொழி, மெய்களால் நினைந்து, வாழ்த்தி, வணங்கு கின்றேன். திருப்பதி-517 502 30-4-67 ந. சுப்பு ரெட்டியார் இரண்டாம் பதிப்பு 'மதிமண்டலச் செலவு என்ற 5-ஆம் கட்டுரை அம்புலிப் பயணம் என்ற புதிய திருநாமம் பெறுகின்றது; கட்டுரை முழுதும் திருத்திப் பெருக்கி எழுதப் பெற்றது. சென்னை-40 31-5-31 ந. சுப்பு ரெட்டியார்