பக்கம்:ஆண் சிங்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


கொண்டிருந்தார்கள். கண்டக்டரின் பேச்சைக் கேட்டுச் சிரித்தார்கள்.

அவளுக்கு வெட்கமும் கூச்சமும் ஏற்பட்டன. தலையைக் குனிந்தபடி நடந்து ஒரு இடத்தில் வசதியாக அமர்ந்தாள்.

“புறப்படலாமா அம்மா? என்று கேட்டு சிறு முறுவல் பூத்த கண்டக்டர் ரைட் கொடுத்தான். பஸ்ஸும் உறுமிக்கொண்டு கிளம்பியது.

அது நேர்த்தியான பஸ். புத்தம் புதுசு. வெளிப்புறம் வெள்ளை வெளேர் என்றிருந்தது. பச்சை வர்ணம் பல இடங்களில் பளிச்சிட்டது. உள்ளே, கைப் பிடிக்க உதவும், உருளைக் கம்பிகள் எல்லாம் வெள்ளி மாதிரி மினுமினுத்தன. எதிரே ஜோரான கடியாரம் ஒன்றிருந்தது. ஸீட்டுகள் ஜம்மென்று–அருமையான மெத்தை மாதிரி–விளங்கின.

அனைத்தையும் பார்வையால் விழுங்கினாள் வள்ளி யம்மை. ‘ஜன்னல்களுக்கு’ கண்ணாடி மறைப்பு இருந் தது அவள் பார்வையைச் சிறிது மறைத்ததால். வள்ளி ஸீட் மீது நின்று வெளியே பார்த்தாள்.

குளத்தங்கரை ரஸ்தா மீது பஸ் ஒடிக்கொண்டிருந்தது. குறுகலான– நொடி விழுந்த–பாதை. ஒரு புறம் குளம். அதற்கப்பால் பனைமரங்களும், புல் வெளியும், தூரத்து மலையும், நெடுவானும்...இன்னொரு பக்கம் பெரும் பள்ளம், பசும் பயிர் தலையாட்டும் வயல்கள். நெடுகிலும் வயல் பரப்பு. எங்கு பார்த்தாலும் ஒரே பச்சை...

எல்லாம் கண்கொள்ளாக் காட்சி அவளுக்கு...

‘ஏ பாப்பா!’ என்ற குரல் அவளை உலுக்கியது. ‘அப்படி நிற்காதே. உட்காரு.’

அவள் இறங்கி நின்று, தலை நிமிர்ந்து பார்த்தாள். பெரியவர் ஒருவர் நல்லது எண்ணிப் பேசினார். பிறர் மற்றவர்களுக்காக எண்ணுகிற ‘நல்லது’ அந்த மற்ற வர்களுக்குப் பிடிக்கவேண்டும் என்கிற விதி எதுவு

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/56&oldid=1072821" இலிருந்து மீள்விக்கப்பட்டது