பக்கம்:ஆண் சிங்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

'கொசுருக்கு ஒரு பாட்டும் பாடிவிட்டு விஷமலரை மோந்து பார்த்து விழுந்து சாகிறான்.

‘இதற்கு விஷப் பூ என்று பெயர் வைக்கலாமே. என்றார் வசனகர்த்தா. ‘கூடாது கூடாது. காதல் – அதிலும், சாகாத காதல் – என்றால் தான் கும்பல் கூடும். மாஸ் மைண்டு எங்களை மாதிரி பீல்டிலே இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும் என்று சொன்னார் டைரக்டர் முதலாளி சோணாசலம்.

மூளை காண் படலம்

சில மாதங்கள் ஒடிவிட்டன. ‘சாகாத காதல் பட விளம்பரங்கள் சில வந்தன. வசனகர்த்தா எல்லாம் எழுதி முடித்து விட்டார். எனினும் படம் பிறக்கவில்லை.

திடீரென்று ஒருநாள் பட முதலாளி வசனகர்த்தாவிடம் சொன்னர் :

“நீங்க எழுதியிருக்கிறது சரி. ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா சில சீன்களே மாற்றியாக வேணும். நாங்க எல்லோருமாகக் கூடி யோசித்ததிலே இந்த முடிவுக்கு வந்தோம்.’

அதுக்கென்ன! திருத்தினால் போச்சு!’ என்றார் ‘கோவலன்’. அத்துடன் சிறிது ‘முந்திரிக்கொட்டைத் தன'மும் செய்தார்: ‘என்ன திருத்தம்? சின்னப்பிள்ளை களாக இருந்தே கதை ஆரம்பிக்கிறதே. அதைவிடப் பெரியவர்களாக வளர்ந்த பிறகிருந்து...”

‘சேச்செச்சே!’ என்று குறுக்கிட்டார் சோணா. அது அப்படியே இருக்கவேண்டியதுதான். அதிலே கூட எட்டு வயசுப் பையனும் ஆறு வயசுப் பெண்ணும் தோட்டத்திலே சந்திச்சு லவ் டயலாக் பேசும்படியாக...’ –

‘லவ்வா! எட்டு வயசுப் பையனுக்கும் ஆறு வயசுப் பெண்ணுக்குமா? நடக்க முடியாதே ஸார்!’ என்று அங்கலாய்த்தார் வசனகர்த்தா.

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/27&oldid=1071133" இலிருந்து மீள்விக்கப்பட்டது