பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜடை பில்லை

103

 “"அது போதும்'” என்று அவள் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.

'“என்ன, விஷயத்தைச் சொல்லாமல் போகிறாயே! கல்யாணம் எப்போது வைத்திருக்கிறீர்கள்”?"

'“அதெல்லாம் இனிமேல்தான் தெரிய வேண்டும். உங்களுக்குத் தெரியாமல் நடந்துவிடுமா, அம்மா?”"

அவள் போய்விட்டாள். ஜடை பில்லை அணிந்த நேரம் தீய நிமித்தமின்றிக் கல்யாணம் சுபமாக முடிய வேண்டுமே என்று நான் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டேன்.

3

கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. இந்தத் தையிலேயே நடத்திவிடுவதாகத் தீர்மானம் செய்தார்கள். எங்கள் எசமானர், நாகநாத ஆசாரியாருக்கு - சொக்கநாயகியின் கணவர்தாம் - வேண்டிய உதவி செய்வதாக ஒப்புக்கொண்டார். கல்யாணத்தைப் பெண் வீட்டிலே செய்வதாக ஏற்பாடு. ஆகையால் நாகநாதருக்குப் பொறுப்பு அதிக மாயிற்று. சொக்கநாயகி விழுந்து விழுந்து வேலை செய்தாள். அடிக்கு ஒரு தரம், “நீங்கள் நகை கொடுத்த நேரம் இந்தக் கல்யாணம் நடக்கிறது'” என்று சொன்னாள் அவள். '“கல்யாணம் நிறைவேறட்டும்”” என்று நான் சொன்னேன். -

கல்யாணத்துக்கும் நான் இரவல் தந்தேன். அவர்களும் புதிய நகைகளைச் செய்திருந்தார்கள். முக்கியமாகப் புதிய சிவப்பில் ஒரு ஜடையில்லை செய்து போட்டிருந்தார்கள். ஆகையால் இந்த ஜடைபில்லையைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று. நல்ல வேளை' என்று. நான் ஆறுதல் பெருமூச்சு விட்டேன். குறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில் மீனாட்சிக்கும் சேந்தமங்கலம் வரதப்பனுக்கும் கல்யாணம் நடைபெற்றது. கல்யாணத்தின்போது