பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்”

ஆனால், அந்த வேளாளரோ ஔவையாரைப் பார்த்து, “என்னிடமுள்ள அபிமானத்தால் அந்தப் பெரியவர் அவ்வாறு பேசுகிறார். இந்த ஊரில் பல பெரிய செல்வர்கள் வாழுகிறார்கள் அவர்களைக் காட்டிலும் நான் மிகவும் சிறியவன் இறைவன் அவர்களுக்கு அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். பொதுவாக அவர்களையும் வாழ்த்துவதுதான் முறை, அடியேனைத் தனியாக வாழ்த்துவதற்கு என்ன செய்து விட்டேன்?” என்றார்.

ஒளவையார் இதுவரையில் பேசாமல் இருந்தவர் இப்போது தம்முடைய திருவாயைத் திறந்தார். முன்னால் பேசிய கிழவரைப் பார்த்து, “இந்த ஊரில் வேறு செல்வர்களும் இருக்கிறார்கள் என்றார்களே. அவர்கள் இவரைவிடப் பணக்காரர் களா?” என்று கேட்டார்.

“ஆமாம் அவர்கள் தங்களுடைய பணத்தைச் செலவழிக்காமல் மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே வருகிறார்கள். ஆனால் இவருக்கோ பணத்தைச் செலவழிக்கத் தெரியுமே ஒழியச் சேர்க்கத் தெரியாது. அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்வேன்” எனறார்.

“அப்படியா! ஏதாவது ஒன்று சொல்லுங்கள் கேட்கிறேன்” என்று ஔவையார் சொன்னார்.