பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

ஆழ்வார்களின் ஆரா அமுது


என்று பேசுகின்றாள். மறந்தும் புறந்தொழா வேண்டி யிருக்க, தேவதாந்தரத்தின் காவில் விழுவது பொருந் துமோ? என்ற வினா எழுகின்றது. வழியல்லா வழியே முயற்சி செய்தாகிலும் கண்ணபிரானோடு கலக்கப் பெற வேண்டும் என்ற முயற்சிகள் யாவும் உபேயத்தில் அடங்கி விடுதலால் அது குற்றமில்லை என்று பெரியோர் பணிப்பர். நமக்கு உரியவர்கள், நம்மைப் பெற நினைப்பவர்கள், நம் காலில் விழாமல் ஒரு தேவதாந்தரத்தின் காலில் விழுந்து துவள்வதை நாம் பார்த்துக் கொண்டிருப்பது முறையன்று' என்று கருதி முகங் காட்டுகின்றான். அவர்கள் வட்டவாய்ச் சிறுதுதை (பானை) யொடு சிறு சுளகும், மணலும் கொண்டு இயற்றும் சிற்றிலைச் சிதைக் கின்றான். பிறகு பு ண ர் ச் சி நேர்கின்றது; இதுவும் பிரிவில் தலைக் கட்டுகின்றது. எம்மைப்பற்றி மெய்ப் பிணக் கிட்டக்கால் (9) என்பதனால் புணர்ச்சி தோற்றும். :இத்தால் ஸ்ம்ச்லேசம் (புணர்ச்சி) பரவ்ருத்தமானபடி (தொடங்கின.படி) சொல்லுகின்றது என்பர் பெரியவாச் சான் பிள்ளை. ஆழ்வார்கள் ஆண்களாக இருந்தபடியால் பெண்ணுடை உடுத்து சமின்னிடை மடவார்கள்' (திருவாய் 6.2) போன்ற திருவாய் மொழிகளில் என்னுடைய பந்தும் கழலும் தந்து போகுநம்பீ (1): ஒரு நான்று தடி பிணக்கே (7): என்றாற்போல சொல்லுவர்கள். இவற்றில் ஆண் சொரூபம் தெரிந்து விடுகின்றது. இங்கு பெண் பிள்ளை தனக்கு அதுக்கு மேலே மென்மை பிறந்து வார்த்தை சொல்லும் வீறுபாடு என்னே!" என்று நம் பிள்ளை ஈடுபட்டு உருகுவாராம். கோழி அழைப்பதன் 22 எனது பந்தையும் அம்மானைக் காய்களையும் திருப்பிக் கொடுத்துவிட்டு உனக்கு விருப்பமான விடத்தே போய் சேர்க நம்பி என்பது பொருள். 23. ஒருகால் உன்னைத் தடியிட்டுத் தகர்க்கும்படி யாகவும் தேர்ந்துவிடும் - என்பது பொருள்.