பக்கம்:காவியக் கம்பன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 புகழேந்தி கம்பர் மகன் அம்பிகாபதி ஒரு பெரும் புலவன் கருத்துரைக்க வேண்டுகிறேன் கேட்போம் என்ருன் அம்பிகாபதி அவைக்கு வணக்கம் செலுத்தினுன் அவையில் கம்பர் புகழ் பொறுத்திலரைக் கண்டான் ஏட்டுக்கு பட்டத்து யானையோ என்றெரிந்தவர் பூசாரியைத் தெய்வமாக்கும் புதுமை என்றவர் வைணவத்துக்கு:வாழ்வெனக் காய்ந்தவர் முணுமுணுப்பும் சலசலப்பும் முள்ளாக உறுத்திற்று புழுங்கிய மனத்தின் உணர்வு பொங்க அம்பிகாபதி என் தந்தை ஆக்கியது தெய்வமாக்கதை அதுபெரிதும் ராமனைப் பாடும் வைணவப் புகழ் சைவரும் பெளத்தரும் சமணரும் கலந்த பொதுச்சபை ஒரு சமய நூலே ஏற்பதோ திருமாவின் கோயிலிலே சிறப்பிக்க வேண்டும் இளையேனுக்கு தெரிந்ததைச் சொன்னேன் இனிமேல் அரசரும் ஆன்ருேரும் முடிவெடுக்க வேண்டுமென பேசி முடித்தான் அவையினிலே பேச்சில்லை பேரரசன் மனம் இடிந்தான் சரராமன் தலை கவிழ்ந்தான் கூத்தரும் குணவீரரும் மெல்ல நழுவினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/52&oldid=796866" இலிருந்து மீள்விக்கப்பட்டது