பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்

9



மலைத்தொடர் (Sola Range) என்றும், அதனை அடுத்துள்ள பெருங் கணவாய்க்குச் சோழ(ர்) கணவாய் (Sola Pass) என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. ‘சோல’ (ழ) என்பதுசிக்கிம்,திபெத் மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருந்தவில்லை”[1] என இராவ்சாகிப் மு. இராசுவையங்கார் அவர்கள் புதிதாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ள செய்திக்குத் தமிழகம் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

இதுகாறும் கூறியவற்றால், கரிகாற் சோழன் வடநாடு சென்று. சிலப்பதிகாரம் கூறுவதுபோல,

“பகைவிலக்கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்”

பெயர்ந்தமை உண்மை என்பதும், அக்காலம் கி.மு. முதல் நூற்றாண்டின் இடைப்பட்ட காலமே ஆதல் வேண்டும் என்பதும் நன்கு விளங்கும் செய்திகளாம்.

வடநாட்டு நிலைமை

கரிகாலன் ஆட்சிக் காலம் எனக்கொண்ட கி.மு.60 கி.மு.20க்கு உட்பட்ட காலத்தில் மகதப் பேரரசு சுங்கர் கையினின்றும் கண்வ மரபினர் கைக்குமாறிவிட்டது. கி.பி.73இல் ‘வாசுதேவ கண்வா’, மகத நாட்டு அரசன் ஆனான். அவனுக்குப் பின் மூவர் கி.மு.28 வரை ஆண்டனர். அவருக்குப் பிறகு மகதநாடு ஆந்திரா வசப்பட்டது. எனவே கரிகாலன் படையெடுத்த காலத்தில் கண்வ மரபினரே மகத நாட்டை ஆண்டவராவர். அவர்கள் வலியற்ற அரசர்களே[2] அவர்கள் காலத்தில் கெளசாம்பியைக் கோ நகரமாகக் கொண்ட வச்சிர நாடும், உச்சையினியைத் தலைநகராகக் கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றிருத்தல் வேண்டும். இல்லையேல், கரிகாலன் இமயம் சென்று மீண்டபோது மகதநாட்டரசன் பட்டி மண்டபமும், வச்சிரநாட்டு


  1. கலைமகள் (1932) தொகுதி 1, பக். 62, 63
  2. V.A. Smith’s “Early History of India,’ pp.215,216.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/29&oldid=583512" இலிருந்து மீள்விக்கப்பட்டது