பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

51


அன்னி பெசன்ட், அந்த நூல்களை வாங்கிப் படித்தார். அந்த நூலில், 'பினாவட்ஸ்கி ஓர் ஏமாற்றுக்காரி: தந்திரக்காரி, தீயவள்; அவளோடு சேர்ந்தவர்கள் எல்லாரும் அதே போன்றவர்கள்தான்' என்று எழுதப்பட்டிருப்பதைக் தைக் கண்டார்.

மறுபடியும் அந்த அம்மையாரிடம் அன்னி சென்ற போது, "நான் கூறிய புத்தகங்களைப் படித்தாயா? என்றார்?


"படித்தேன், நான் அதை நம்பவில்லை; என்னை தங்கள ஞான சபையிலே உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்-சேர்ந்தார்!


பிரும்மஞான சபையிலே அன்னி சேர்ந்ததைக் கண்டு, இங்கிலாந்திலே எதிர்ப்புப் புயல் வீசியது. ஆவருடைய முன்னாள் நண்பர் சார்லஸ் பிராட்லா இதை ஆறித்து கடுமையாகத் தனது பத்திரிகையிலே எதிர்த்து எழுதினார்!

அன்னி பெசண்ட் இந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சினாரில்லை! ஏனென்றால், அவருடைய வாழ்க்கையே ஆரம்ப முதல் எதிர்ப்பிலே நீய்ச்சல் போட்ட வாழ்க்கைதானே!

அதற்குப் பிறகு பேசிய கூட்டங்களிலே, நான் ஏன் பிரும்மஞான சபையிலே சேர்ந்தேன்’ என்பதற்குரிய பதிலையே பேசினார்!

ஆனாலும், பஸ், டிராம், ரயில் ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்க்ளின் பணிநேரங்களைக் குறைக்க ஒரு போராட்டத்திலே ஈடுபட்டார்!


பிரும்மஞான சபை சம்பந்தப்பட்ட நூற்கனைத் தேடித் தேடி படித்தார். அதன் கோட்பாடுகளைப் பரப்ப பல கூட்டங்களிலே கலந்துகொண்டு பேசினார்:


பிளாவட்ஸ்கி அம்மையார் ஒரு பெண்கள் விடுதியைப் புதிதாகக்கட்டினார். அந்த விடுதிக்கு அன்னி பெசண்டைத்