பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

59

முழுவதுமாக இந்தியர்கள் கொண்டாடினார்கள். இதனால் அன்னி பெசண்ட் அம்மையாருக்கு பெரும்புகழ் வளர்ந்தது. எனலாம்.

அன்னி பெசண்ட் அம்மையாரின் எழுத்தும், பேச்சும், மூன்று மாதச் சிறையடைப்பும்,இந்திய மக்களை ஒற்றுமைபடுத்தின. இந்தியாவுக்கு மக்கள் பொறுப்பு ஆட்சி வழங்கப்படும் என்ற அறிக்கையை பிரிட்டிஷ் அரசு 1917ல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டது.

காந்தியடிகள், பிணங்கி நிற்கவில்லை; திலகர் பேராதரவு இயக்கத்துக்குக் கிடைத்தது: ஜனாப், ஜின்னாவும் அம்மையார் இயக்கக் கிளர்ச்சிக்குப் பேராதரவு தந்தார். இதனால், 1917-ம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபைக்கு அன்னிபெசண்ட் அம்மையாரைக் காங்கிர்ஸ் பேரியக்கம் தேர்ந்தெடுத்தது.

திலகர், சர்வாலண்டையன்சிரால் என்பவர் மீது லண்டனில்வழக்குத்தொடுத்திருந்தார்.அந்த வழக்குக்குரிய சான்றைக் கூறிவிட்டு, இந்தியா திரும்பும்போது தான் சென்னை வந்து இறங்கினார். பெரம்பூரில் உள்ள தேசபக்தன் காரியாலயக் காரியதரிசி சுப்பராயக் காமத் என்பவர் வீட்டில் திலகர் தங்கியிருந்தார்.

இந்த வழக்கில் அன்னி பேசண்ட் அம்மையாரும் ஒரு சாட்சி. அவரும் லண்டன் சென்று தனது சாட்சியத்தைக் கூறிவிட்டு இந்தியா திரும்பினார்.

திலகரைக் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி.யும், திரு வி.க.வும், காமத்தும் சென்று வரவேற்றுப் பெரம்பூர் காமத் வீட்டில் தங்கவைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது, அம்மூவருள் ஒருவர் திலகர் பெருமானிடம் ஒரு கேள்வி கேட்டார்.

அக்கேள்வி இது : நான் தங்களைத் தலைவராகக் கொண்டவன்: தங்கள் அடிச்சுவட்டைப் பற்றி நடத்தவன்;