பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அன்னி பெசண்ட் அம்மையாரின்


ஆங்கில ஆட்சியினால் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் சீர்கேடடைந்த இந்தியாவைக் கண்டு, நான் புத்தகங்களில், வரலாறுகளில் படித்த நாடா இது? என்று வியந்து பரிதாபப்பட்டார்.

நாட்டை ஆட்சி செய்வதற்கான எல்லாத் தகுதிகளும் ஆற்றலும் அறிவும் இந்தியருக்கு உண்டு என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னர் ஆட்சி நடைபெற்ற நாடு இந்தியா. கிராமப் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.

மக்களாட்சி முறையில் மன்னர்களையும், ஊராட்சி உறுப்பினர்கனையும் பொதுமக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்:

இப்படிப்பட்ட பரம்பரையில் வந்த இந்தியர்களுக்கா தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தெரியாது? என்று அன்னி பெசண்ட் ஆங்கில ஆட்சியைப் பார்த்துக் கேட்டார்.

ஆளத் தெரியாது என்றும், அந்த அறிவும் ஆற்றலும் இன்னும் வரவில்லை என்ற ஊமைக் காரணங்களால் சைகை அறிகுறிகளைக் காட்டிப் பேசுவது, இந்தியர்கனை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் மாயை என்றார்!

அன்னி பெசண்ட், ஆங்கிலேயரின் மூடுமந்திர வித்தைகளைப் பொது மக்களிடம் தவிடுபொடியாக்கிக் காட்டிட அவரே நேரடி அரசியலில் ஈடுபட்டார்.

'ஹோம் ரூல்' இயக்கம் என்ற ஓர் இயக்கத்தை உரு-