பக்கம்:அன்னை தெரேசா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அன்பான ஒளிக்கிரணங்களில் அன்பைத் தேடி நாற்புறமும் பார்வையைச் செலுத்தியவாறு. அவரது மென்மையான பாதங்கள் அடிபிரித்து, அடி மிதித்து நகர்ந்து கொண்டே யிருக்கின்றன; அவரது மனம் வழக்கம் போலவே, தேவதூதரைப் பிரார்த்தனே செய்து ஜபம் செய்து கொண்டிருக்கிறது. ஜீவமரணப் போராட்டம் நடத்தி, உள்ளம் ஒடுங்கி, உயிரும் ஒடுங்கி ஊசலாடிக் கொண்டிருந்தாள் பெண் ஒருத்தி; நடுத்தெருப் பிணமாகவே காட்சியளித்தாள்; குற்றுயிரும் குலே உயிருமாகச் சுயப் பிரக்ஞை இழந்து இடந்த அவளை-அந்த அபலேயை-அந்தப் பாவியை ஏறிட்டுப் பார்க்கவோ, அல்லது, ஏறெடுத்துப் பார்க்கவோ மனித சாதியில் நாதி இல்லை!-ஆதலால், வாய்பேசத் தெரியாத எலிகள், மற்றும் எறும்புகள் அனுதாபத்துடன் பரிதாபத்துக்குகந்த அந்த அம்மணியைச் சுற்றிச் சூழ்ந்து சிறுகச் சிறுக அரித்துத் தின்னத் தொடங்கியிருந்தன; ஊகி குத்த இடம் வைக்காமல், புள்ளிக் கோலம் போட்டிருந்த கொப்புளங்களை மொய்த்த ஈக் கூட்டம் மிஞ்சியது; நாற்றம் வேறு! பாவம்! பரிதாபம்! பாவம்! ... அன்னையின் விழிகள் அன்பினல் கசிந்தன; அன்பின் போருட்டுக் கசிந்தன. சுடுநீரின் கசிவில், நெஞ்சின் உதிரம் சங்கமம் ஆனது; அன்பைப் போதித்த ஆண்ட வனின் அன்பைப் பெற வாய்ப்பின்றி, வழியின்றி, நடுத் தெருவிலே நாதியிழந்து, நாதியற்றுக்கிடந்த கொடுமை யான, பாவமான அவலத்தைக் காணக் காண அன்னையின் மனித அபிமானம் உறுத்தியது; அனுதாபமும் ஆத்திரமும் மேலிட, சுற்றுமுற்றும் நோக்கினர்; எதிர்ப் பக்கம் மருத்துவமனை ஒனறு தென் படவே, அங்கே விரைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/76&oldid=736390" இலிருந்து மீள்விக்கப்பட்டது