பக்கம்:அன்னை தெரேசா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 1950 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் நாளிலே, கிரீக் தெருவில் 14 ஆம் எண் கொண்ட கோம்ஸ் இல்லத்தின் மாடியிலே, கிறிஸ்தவத் திருச்சபையின் மேலாளர்களின் ஒப்புதலோடு புனித அன்னை மேரி தெரேசா தமது அன்புப் பணி அமைப்பிற்கு அன் பின் துரதுவர்கள்' என்று பெயர் சூட்டி, சட்ட முறைப்படி ஆரம்பித்து வைத்த அன்புப் பணி இயக்கம் இன்று பாரதம் கடந்து உலகமெங்கிலும் தழைத்து வருகிறது. - உலகத்தின் மனிதர்களுக்கு அன்னை விடுத்துள்ள அன்புச் சேதி இதுதான்: "...துன்புறுத்தும் வரையிலும் அன்பு செய்யுங்கள்!” உலகத்தின் அன்புக்குப் பாத்திரமான அன்னையுடன் அன்போடும், பாசத்தோடும், பக்தியோடும் நெருங்கிப் பழகும் பாக்கியத்தைப் பெற்ற திருமதி டாஃப்னே ரே (Daphme Rae) அன்னேயின் மேற்கண்ட அன்புச் செய்தி யையே மகுடமாக்கி எழுதியுள்ள துன்புறுத்தும் வன்ர. vY Ayub, 3ysruj Q4 lå ugså $6sr!” (Love untii it hurts) s75#SBy th புத்தகத்தில் சொல்லுவதாவது: "...வாழ்க்கை எனப் படும் புதிர் விளையாட்டில், அன்பு எனும் மகா சக்தியின் மகிமையையும் பங்குப் பணியையும் நான் தெரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் பொன்னு னதொரு வாய்ப்பு வசதியை எனக்கும் ஏற்படுத்திக் கொடுத்த பெருமைக்கும், புண்ணியத்திற்கும். உரியவர் அ ம் மி தெரேசா-தெரேசா அம்மாவே. ஆவார்!. அன்பு, நம்மைத் துன்பப்படுத்தும் பசியந்தம் நாம் அன்பு செய்து கொண்டேயிருக்க வேண்டும் அவ்வாறு செய்யும் பட்சத்தில், பின்னர் நமக்குத் துன்பமே ஏற்படாது; அந்த அன்பு வளரவும் பெருகவுமே செய்யும்: அதுவே அன்பின் உன்னதம்; அற்புதம்! ...” * .. அம்மையார் சொல்வது மெத்தச் சரிதான்!போரும், போராட்டமும் போட்டியும், பொருமையும், ஆசையும், பேராசையும் நிறைந்த நடப்பு உலகத்திலே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/22&oldid=736331" இலிருந்து மீள்விக்கப்பட்டது