பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை.இளஞ்சேரன்

13


வடமொழியாகக் கொண்டு அதனை அவருக்கு வழங்க மனமின்றி 'பா வேந்தர்'என்று புகழப்படுகிறார். ஆனால், பாவேந்தராம் புரட்சிக் கவிஞர் அவர்களே 'கவிதை' தமிழ்ச்சொல் என்று எழுதினார். அவர் கருத்தின்படியும் 'கவிதை' என்பது தமிழ்ச் சொல்லே.

எவ்வாறு?

'கவிதை' என்னும் தமிழ்ச் சொல்லிற்குப் பகுதி 'கவி'. இதற்கு மூலச்சொல் 'கவ்’ என்பது 'கவ்’ என்றால் கவ்வுதல், கவர்தல் கவர்ச்சித்தல் எனப் பொருள்படும். இதற்குத் திருவள்ளுவரே சான்று தந்தார் :

"கவ்வையால் கவ்விது காமம்" (1144) என்னும் தொடரில் 'கவ்' இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. முதலில் உள்ள 'கவ்வை' என்பதற்குத் 'துன்பம்' என்று பொருள். அஃதாவது கவ்வுதலால் ஏற்படும் மனத்துன்பம். இக்குறட்பாவில் கவ்விய, 'அலர்’ என்னும் பழிச்சொல்லும் துன்பத்தைக் குறிக்கும். இரண்டாவதாக உள்ள 'கவ்' என்பது கவர்ச்சியுள்ளது; 'கவர்ச்சியால் இன்பம் தருவது' என்னும் பொருள் காட்டுவது.

இஃது இ என்னும் இறுதி இணைந்து 'கவி' என்னும் சொல்லாயிற்று, செவ் + இ = செவி: குவ்+இ = குவி (குவியல்); புவ்+இ = புவி என்றெல்லாம் ஆனமை போன்று 'கவி' உருப்பெற்றது. ('பெளவம்' என்னும் தமிழ்ச் சொல்லுக்குக் 'கடல்’ என்று பொருள். பெளவம், 'புவ்வம்' என்றாகும். "புவ்வத்-தாமரை”[1] என்று பாடப்பட்டுள்ளது). 'புவ்’ என்னும் கடல் நீரை உடையது புவி.


  1. இளம்பெருவழுதியார் : பரிபாடல்-15-49.