பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணிந்துரை கம்பன் அடிசூடி பழ. பழநியப்பன்

" கம்பருக்கு அடிமையென்று

கைச்சாத்து செய்துவிட்டேன்; இம்பர்வேறு ஒன்றற்கு இடமுண்டோ?” என்னும் சொ. முருகப்பாவின் பாடல் அடிகளே என் உச்சிமேற் கொண் டொழுகத் தக்கன என்றாலும், கலி காலம் நிரம்பவும் பொல்லாதது ! இல்லாவிட்டால் ஆசிரியப்பிரான் - ஒருவர் தம் மாணாக்கனையே தம் நூலொன்றுக்கு அணிந்துரை எழுதச் சொல்வாரா, என்ன?

இக்: , ်

அதுவும் யாரைப்பற்றி? "வேத நன்னூல் உய்த்துள காலமெல்லாம் புகழொடும் ஒக்க நிற்கும்" அதுமனைப்பற்றி! மனமாசுகளை எல்லாம் ஆசு இரியும் பிரானல்லவா? காரணத்தோடுதான் செய்துள்ளார்கள். 'போர் உதவிய திண்தோளால் பொருந்துறப் புல்லுக!' என்று இராமபிரானே தன் தொண்டனாம் அதுமனைத் தன்னை வந்து மார்புறத் தழுவிக்கொள்ளப் பணித்தானே, அதே போன்று, அந்த அதுமனைப்பற்றி ஐம்பது ஆண்டுகட்கும் மேலாகத் தம் கருவில் உருக்கொண்டிருந்து வெளிவரும் நூற்குழந்தையை முதலில் அவர்தம் மாணாக்கத் தொண்டனாம் இச்சிறியவனிடம் தந்து சீராட்டச் சொல்வது சாலப் பொருத்தந்தானே? அதுதானே, அந்த இராம நாமத்தை அல்லும் பகலும் அனவரதமும் நினைந்து நினைந்து நெகிழ்ந்துருகித் துதி செய்து மகிழும் ரு சடகோபன் பொன்னடியாம் பேராசிரியர் சுப்பு ரெட்டியாரவர்களுக்கு உகந்த கைங்கர்யம்!

இன்னுமொன்று : தன்னை வணங்குவோரையும் தான் வணங்கி மகிழும் ஒரே கடவுள் அநுமனே! எந்தச் சந்நிதியிலும் இல்லாது, அநுமன் சந்நிதியில் மட்டுமே அஞ்சலி ஹஸ்தனாய்க் கூப்பிய கைகளுடன் கூடின. இறையைக் கண்கள் கொள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/6&oldid=1472396" இலிருந்து மீள்விக்கப்பட்டது