பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கலை, இந்நூலில் காணப்பெறும் ஒவ்வோர் இயலும், ஒவ்வொரு கோணத்தில் அதநுமனை முழுவதுமாய்க் காட்டிடும் புதிய பார்வை வீச்சுகள்; முழுப்பார்வை முயற்சிகள், பேருருவ தரிசனங்கள். 'கவிக்கு நாயகன், சிந்தனைச் செம்மல், இராம பக்தன்' என்னும் பகுதிகள் அநுமனின் மனோ பலத்தையும், சொல்லின் செல்வன்', 'இராம தூதன்', 'குணக்குன்றன் என்னும் பகுதிகள் அநுமனின் வாக்கு பலத்தையும், அஞ்சா நெஞ்சன், 'விழையும் உருவினன்' என்பன அநுமனின் காய பலத்தையும், மொத்தத்தில் அதுமனின் பேருருவைக் கண்ட மகிழ்ச்சியை நம்முள் உண்டாக்குவன.

நூன்முகத்தில் ஆசிரியரே சொல்லுவது போல, இராம பக்தனாகிய அநுமனைப்பற்றி எழுதிய இந்நூலும் எட்டெழுத்து மந்திரம் போல, எட்டுப் பகுதியாய் அநுமனின் எண்குணங்களை விரித்துச் சொல்கிறாற்போல அமைந்ததுவும் அவன் திருவுளமேயாம்.

‘சுப்பு ரெட்டியாரா, சுறுசுறுப்பு ரெட்டியாரா?' என்றுஎண்பத்து ஏழாண்டான வயதில் இவர்கள் உழைப்பும் முயற்சியும் நம்மை வியக்க வைக்கின்றன. அவர் வணங்கும் அந்த வேங்கடவனை, வேண்டுவார்க்கு வேண்டுவன ஈந்து நலந்தரும் நாராயண நாமத்தானை, அவர் நூற்றாண்டு கண்டு, இன்னு மொரு நூறு நூல்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு விருந்தாகச் செய்தளிக்கப் பிரார்த்திப்பது அல்லால், வேறென் செய்ய வல்லோம்?

"அடியார்கள் வாழ! அரங்கநகர் வாழ!

சடகோபன் தண்தமிழ்நூல் வாழ! - கடல்சூழ்ந்த

மண்உலகம்வாழ வேங்கடம் உறைரெட்டியே!

இன்னும்ஒரு நூற்றாண்டு இரும்!

இனிய தமிழ்ப்பிழிவாய் உன்னிலிருந்து

இன்னும் ஒருநூறு நூல்கள்வரும்‌!

'சரணம்' - கம்பன் அடிசூடி

வி 110/1, அண்ணா நகர்,. சென்னை - 600 040,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/9&oldid=1473344" இலிருந்து மீள்விக்கப்பட்டது