பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வன் 27

புகழ்மிக்கவர்கள், வஞ்சனையால் இராவணன் தூக்கிச் சென்ற பிராட்டியைத் தேடுபவர்களாக இவண் போந்த வர்கள். மனத்துய்மையுடைய உன் உறவினை நாடுகின்றனர்" என்று முடித்து, இராமலக்குவர்களுடன் உறவு கொள்ளுமாறு ஆலோசனை கூறுகின்றான். இவைபற்றிய பாடல்களைப் படிக்கும்போது அதுமனை நாம் சொல்லின் செல்வனாகக் காண்கின்றோம்.

(4) இராமனுக்கு வாலியைப்பற்றிக் கூறும்போது : சுக்கிரீவன் அளித்த விருந்தில் இராமன் பங்கு கொள்ளு கின்றான். அங்குச் சுக்கிரீவனின் மனைவி இராமன் கண்ணில் படவில்லை. உடனே குரக்கரசனை நோக்கி,

"பொருந்து நன்மனைக்

குரிய பூவையைப் பிரிந்து ளாய்கொலோ

நீயும்?"

என்று இராமன் வினவ, அதற்கு அநுமன் விடை பகரத் தொடங்குகின்றான்." உருக்கமான இந்தப் பேச்சில் அநுமனின் சொல்லாற்றல் தெளிவாகின்றது; சொல்லின் செல்வனாக நாம் காண்கின்றோம்.

"ஆதிமூர்த்தியாகிய நீதியாய், உருத்திர மூர்த்தியின் அருள் பெற்றவன், வாலி, சுக்கிரீவனுக்கு மூத்தவன்; வரம்பிலாற்றல் உடையவன். சாவா மருந்தாகிய அமிழ்தத்தைப் பெறுவதில் வாலி தனி நின்று கடைந்து அதனைப் பெற்றவன் (38). நிலம் முதலிய நான்கு பூதங்களின் ஆற்றலுடன் சக்கரவாள மலையினின்றும் இங்குள்ள மலைக்குத் தாவும் ஆற்றலுடையவன் (39). எவருடன் போர் புரியினும் அந்த எதிரியின் பாதிப்பலம் எய்தும் பேறு பெற்றவன்; நாடோறும் எட்டுத் திக்கிலும் சென்று அஷ்டமூர்த்தி எனப்படும் சிவபெருமானின் திருவடிகளைப் பணிகின்ற அன்பினன். (40)

"அந்த வாலியின் வேகத்திற்குக் காற்றுத்தேவனும் ஈடாகான்; கந்தவேளின் வேலும் அவன் மார்பில் நுழையாது;

10. கிட்கிந்தை - நட்புக்கோள் - 35 11. கிட்கிந்தை - நட்புக்கோள் - 37 - 65………….

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/28&oldid=1509376" இலிருந்து மீள்விக்கப்பட்டது