பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 அண்ணல் அநுமன்

காதிசேப் தருகடல்

கடவுள்வெம் படையினார்" (5) (நெறிவயின் - சன்மார்க்கத்தில்; பேதியா - மாறுபடாத காதிசேய் - விசுவாமித்திரர்)

என்று கூறுகிறான். இப்பாடல்கள்மூலம் அநுமனின் சொல் திறத்தைக் கண்டு மகிழலாம். இவற்றில் "ஊழியால் (முறைமையினால்) நிற்கு அரசுதந்து உதவுவார் என்ற குறிப்பு கவனிக்கத்தக்கது.

"நீதியார் கருணையின் நெறியினார், பேதியா நிலைமையார் எவரினும் பெருமையார்” என்பவற்றால் நம்மிடத்தில் பழகியும் ஒருகால் வாலி வலியன் என்று மாறுவரோ? என்ற ஐயத்தை ஒழிக்க வந்தன என்பதைச் சிந்திக்கலாம்.

(3) ஏழு கவிகளால் அநுமன் இராமன் பெருமையை எடுத்துக்காட்டுகளால் விளக்குகின்றான். தாடகையின் மகன் சுபாகுவைக் கொல்லுதல், தன் திருவடிப் பொடியினால் கல்லாய்க் கிடந்த அகலிகைக்கு உண்மை உருவம் நல்குதல் (6), பிராட்டியை மணக்கத் தியம்பகம் என்ற வில்லை முரித்தல் (7), இளவல் பரதனுக்குக் கைகேயி கட்டளைப்படி ஆட்சியை நல்கி இராமன் வனவாசம் ஏற்றல் (8), பரசுராமனுக்குப் பங்கம் விளைவித்து, விராதனை வதைத்தல் (9), கரனையும் கடல் போன்ற அவன் சேனையையும் ஒழித்து உருத்திரன் முதலிய தேவர்களையும் வியக்கச் செய்தல் (10), சூர்ப்பணகையின் மூக்கும் காதும் வெம்முரண் முலைக் கண்களும் அரியச் செய்தல், நிருத மாரீசனார் மாய மானாக வந்தபோது அவனுக்கு யமனாதல் (ா), தன்னிடத்துப் பக்தி கொண்ட சபரிக்கும், தன்னை விழுங்க முயன்ற கவந்தனுக்கும் பரமபதம் அளித்தல் (12) போன்ற செய்திகளைக் கூறி இராமலட்சுமணர்களின் பெருமைகளை உணர்த்தி, இறுதியாக, இருடியர் முதலியோர் இவர்தம் வருகையைக் குறித்துத் தவம் செய்கின்றதனால் இவர் தீயோரை அழித்து நல்லோரைக் காக்கத் திருவவதரித்த முதற்கடவுளே என்று அறுதியிட்டுக் கூறி, "இத்தகைய

9. கிட்கிந்தை - நட்புக்கோள் - 6 - 13... ..... . ..............

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/27&oldid=1509165" இலிருந்து மீள்விக்கப்பட்டது