பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

83

உறுதியுள்ள பேழையைப் 'பெட்டகம்’ (பெட்டு-அகம்) என்கிறோம். இங்கெல்லாம் 'பெட்டு' என்னும் சொல் 'போற்றிப் பாதுகாத்தல்' என்னும் பொருளில் உள்ளது.

இவற்றின் முன்னோடிச் சொல்லாகத் திருவள்ளுவர் ஆக்கிய "பெட்டக்கது" என்னும் சொல் பெரும் செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்கும் கருத்தைக் கொண்டது.

ஒரு நாடு வளத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் பெரும் செல்வத்தால் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். அதற்குப் பெரும் மதிப்புடைய செல்வம் போற்றிப் பாது காக்கப்பட்டு, இருப்பில் அமைய வேண்டும். இது "பெரு பொருளால் டெட்டக்கதாகி" என்பதன் விளக்கமாகும்.

செல்வம் என்பது செலாவணிக்கு உரியது என்றாலும் அதன் மதிப்புடைய பொருள்கள் நாட்டு மக்களுக்குத் தட்டாமல் கிடைக்கவும், அவற்றைப் பெற்றுத்தரும் பண்டமாற்றுப் பொருள்களாகிய நாணயம் முதலியன தம்மதிப்பைக் குறைத்துக் கொள்ளாமலோ கூட்டிக்கொள்ளாமலோ இருக்கவும் மதிப்புடைய செல்வம் நாட்டுக் கருவூல இருப்பாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் இக்கருத்து இக்காலச் செல்வப் பொருளிய'லில் எவ்வாறு மலர்ந்துள்ளது என்பதைக் காண முடிகின்றது.

நாணயத்தையோ பணத்தாளையோ அரசு வெளியிடும் போது அவற்றின் மதிப்புடைய பொன், வெள்ளி முதலிய செல்வப் பொருள்கள் அரசுப் பாதுகாப்புக் கருவூலத்தில் இருப்பாக வேண்டும் என்று விளக்கப்பெற்றது. இச் 'செல்வ அறிவியல்' "பெட்டக்கதாகி” என்னும் சொல் லாக்கத்தில் அமைந்துள்ளது. பொருள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது என்பதை "பொருளாட்சி போற்றாதார்க்கில்லை" (252) என்பதாலும் திருவள்ளுவர்